மாஜி அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது.. கரூரில் பரபரப்பு...

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2021, 5:06 PM IST
Highlights

அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் அப்போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்

கரூரில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட 8 கவுன்சிலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம். ஆர் விஜயபாஸ்கர், சமீபத்தில் இவரது வீடு மற்றும் அலுவலகம் மற்றும் அவருக்கு நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

இதையும் படியுங்கள்: தமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.

அமைச்சராக இருந்தபோது அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்பது அவர் மீதான புகார். அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து சோதனை மேற்கொண்டனர். தற்போது அது சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்ட ஊராட்சி  துணைத் தலைவர் தேர்தலை தள்ளி வைப்பதாக கூறிவிட்டு தேர்தல் அதிகாரி வெளியே வந்ததார், தேர்தலை தள்ளி வைப்பதற்கான காரணம் என்ன எனக்கேட்டு அவரது வாகனத்தை முற்றுகையிட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள்: தமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.

இதனால் அங்கிருந்த போலீசார் அவர்களிடமிருந்து அதிகாரியை மீட்க முயற்சித்தனர், அப்போது கரூர் காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் அப்போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர் இந்த சம்பவம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!