கொரோனா தொற்றால் இறந்தவர் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.!பீதியில் கீழக்கரை.!!

By Thiraviaraj RMFirst Published Apr 6, 2020, 9:04 PM IST
Highlights

கொரோனா தொற்றால் கீழக்கரையைச் சேர்ந்த ஒருவர் இறந்த சம்பவம் அங்குள்ளவர்களையும், அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் தனிமையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


கொரோனா தொற்றால் கீழக்கரையைச் சேர்ந்த ஒருவர் இறந்த சம்பவம் அங்குள்ளவர்களையும், அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் தனிமையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம, கீழக்கரை சின்னகடைத்தெருவை சேர்ந்தவர் முகமதுஜமால். வயது 71. இவர் கடந்த 20  நாட்களுக்கு முன்பாக வெளிநாடு சென்று சென்னை வந்துள்ளார்.இவருக்கு வந்த நாளிலிருந்து உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சலாகவே இருந்துள்ளது.இதை தொடர்ந்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலை  ஏப்ரல் 2ம் தேதி அவரது உடல்நிலை மோசமான நிலையில்  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.அவரது உடல் சொந்த ஊரான கீழக்கரைக்கு கொண்டு வரப்பட்டு ஏப்ரல் 3ம் தேதி கீழக்கரை நடுத்தெரு ஜீம்மா பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கில் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டனும் கலந்து கொண்டார். அவர் அங்கு ஒரு மணி நேரத்திற்க்கு மேல் இருந்தது குறிப்பிடதக்கது.

 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலாராஜேஷ் அறிவித்தார்.ஆனால் இவர் கடந்த 2ம் தேதியே உயிரிழந்துவிட்டார்.இது கீழக்கரை மக்களை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது,இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்

இதுபற்றி கீழக்கரை சமூக ஆர்வலர்கள் கூறுகையில்.., "இறந்த நபருக்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,கடந்த ஏப்ரல் 2ம்தேதி அரசு ஸ்டான்லி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து ரத்தமதிரிகள் எடுத்துள்ளனர். இந்நிலை அவர் அன்றே மருத்துவமனையில் உயிரிழந்தார். மருத்துவர்கள் அவர் முதுமை காரணமாக உயிரிழந்ததாகவும் அவரை சொந்த ஊருக்கு எடுத்து செல்லலாம்.எனவும் இறந்தவருடன் அவரது உறவினர்கள் 10 நபர்களும் செல்லலாம் என அனுமதி கடிதம் அளித்துள்ளனர்.ஆனால் தற்போது அவருக்கு கொரோனா இருப்பதாக முன்னுக்கு பின் முரணாக கூறுவது ஏன்,மருத்துவர்களின் அலட்சியத்தால் கீழக்கரை முழுவதும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

இதையடுத்து கீழக்கரைக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ்ராவ்,அவர் தங்கியிருந்த பகுதி உட்பட சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் சீல் வைக்க காருக்குள் இருந்தப்டியே உத்தரவிட்டார்.இறந்தவர் வீட்டைச் சுற்றி நகராட்சி துறையினரால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்துபோய் இருக்கிறார்கள். காரணம், இறந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியாமலேயே அவருடன் சென்னையில் இருந்து கீழக்கரை வந்தது, அவரது உடலை குளிக்க வைத்தவர்கள், உடல் அடக்கம் செய்ய பள்ளிக்கு சென்றவர்கள்,உறவினர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இதனால் கீழக்கரையை அமைதியாக காட்சியளிக்கிறது.

click me!