சொத்து குவிப்பு.. முன்னாள் அமைச்சர் KC.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் சோதனை.. அதிர்ச்சியில் அதிமுக தலைமை.!

By vinoth kumarFirst Published Sep 16, 2021, 8:08 AM IST
Highlights

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்பட 28 இடங்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி அளவிற்கு சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமைச்சர் கூறியிருந்தார். 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பத்திரப்பதிவு துறையில் வெளிப்படையாகவே முறைகேடு நடந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக உயர்நிலைக் குழு அமைக்கப்படும். 

பத்திரப்பதிவு துறையில் முறைகேடாக பதிவு நடந்து, அது உண்மை என்று நிரூப்பிக்கப்பட்டால், சார் பதிவாளர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூரத்தி தெரிவித்திருந்தார். ஆகைால், அடுத்த டார்கெட் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்பட 28 இடங்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூருவிலும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அதேபோல், திருவண்ணாமலையின் குருவிமலை கிராமத்தில் உள்ள வீரமணியின் உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்களாக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

click me!