திமுகவிற்கு இனி நாள் தோறும் அமாவாசை தான்… முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி!!

திமுகவிற்கு இனிமேல் நாள் தோறும் அமாவாசை தான் என்றும் இனி வெளிச்சமே கிடையாது என்றும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

Former Minister Kadambur Raju slams dmk regarding ammavasai sentiment

திமுகவிற்கு இனிமேல் நாள் தோறும் அமாவாசை தான் என்றும் இனி வெளிச்சமே கிடையாது என்றும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று அதிமுக வெற்றி பெரும். ஒரு வேளை இரட்டை இலை சின்னம் கிடைக்க பெற தாமதமானாலும் அதிமுக தான் வெற்றி பெறும். அதிமுகவில் பிரச்சினை உருவாகும் போது எல்லாம் இடைத் தேர்தல்  திருப்பு முனையாக அமையும், திண்டுக்கல் இடைத் தேர்தல் திருப்பு முனை போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திருப்பு முனையாக அமையும்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி சிறுவன் பலி..! மாவட்ட நிர்வாகமே பொறுப்பு- அன்புமணி ஆவேசம்

Latest Videos

தமிழகத்தில் தாமரை மலரும் தாமரை மலரும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் முன்பே தாமரையை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து உடன் கருப்பு சிவப்பு அறிமுகபடுத்தி கொடியில் ஏத்துனது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான். இடைத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு அதிமுக எந்த அணியும் இருக்காது எல்லாம் ஓர் அணி தான். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பம்பரம் போல் சுற்றி பிரச்சாரம் மேற்கொண்டவர் எடப்பாடியார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு ரத்து..? மத்திய அரசு கேட்ட விளக்கம்..! சட்டத்துறை மூலம் பதில் - மா சுப்பிரமணியன்

அதனால் தான் 75 தொகுதியை கைப்பற்ற முடிந்தது. 2021க்கு பிறகு எடுத்த ஒற்றை தலைமை நிலைபாட்டை ஓராண்டுக்கு முன்னரே எடுத்து இருந்தால் நாம் ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருப்போம். தை அமாவாசை என்று நன்நாள் பார்த்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 அமைச்சர்கள் இன்று பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். அமாவாசை செண்டிமெட் எல்லாம் திமுகவிற்கு செட் ஆகாது. திமுகவிற்கு இனிமேல் நாள் தோறும் அமாவாசை தான் வெளிச்சமே கிடையாது என்று தெரிவித்தார். 

click me!