ஓபிஎஸ் அணியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன்… பாடலாசிரியர் சினேகனும் ஆதரவு…

 
Published : Apr 03, 2017, 12:05 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
ஓபிஎஸ் அணியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன்… பாடலாசிரியர் சினேகனும் ஆதரவு…

சுருக்கம்

former minister joined in ops team

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான ராஜ கண்ணப்பன், சென்னையில் இன்று ஓபிஎஸ் முன்னிலையில் அவரது அணியில் இன்று இணைந்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் சென்னையில் இன்று ஓபிஎஸ்.,சை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  ராஜகண்ணன்.  சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மதுசூதனன் அமோக வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுவதைப் போல் அதிமுக இரண்டாக உடைந்து விடவில்லை என்றும், ஒரே கட்சியாக திகழும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாதுதெரிவித்தார். அதே நேரத்தில் இந்த இடைத்தேர்தலுடன் சசிகலா அணி காணாமல் போகும் என தெரிவித்தார். 


இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து ஓபிஎஸ் தலைமையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வோம் என்றும்  அதிலும் அமோக வெற்றி பெறுவோம் என ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

அதிமுகவில் உள்ள  95 சதவீத தொண்டர்கள் ஓபிஎஸ் அணியின் பக்கம் தான் உள்ளனர் என்றும் தினகரன் பக்கம்  இருப்பவர்கள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் தான் என தெரிவித்தார்.

 
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அவர்களும் ஓபிஎஸ் பக்கம் வந்து விடுவார்கள் என்றும் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாடலாசிரியர் சிநேகனும் ஓபிஎஸ்ஐ சந்தித்து தனது முழு ஆதரவை தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்