முதல்வரும் அவரது மகனும் சினிமா படம் பார்த்து ரிவ்யூ சொல்ல தான் நேரம் இருக்கு! மக்கள் அவலம் தெரியலையா? அதிமுக.!

By vinoth kumar  |  First Published Jan 14, 2024, 2:23 PM IST

தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் புறப்படும் என்று அறிவித்து விட்டு திடீரென்று முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிளாம்பாக்கத்தில் பேருந்து என மக்களை அலைய வைக்கிறது அரசு. 


பொங்கல் முடிந்து தான் பொதுமக்களை ஊருக்கு அனுப்ப வேண்டும் என முதலமைச்சரும் போக்குவரத்துத்துறை அமைச்சரும் முடிவெடுத்து வைத்ததை போல ஆமை வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

பொங்கல் திருநாளை ஒட்டி பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையில் 6 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்ட மக்கள் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டது. 

Latest Videos

 

இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திடீரென அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், அரசு விரைவு பேருந்துகளில் ரிசர்வ் செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்து பேருந்து ஏற வேண்டும் என்றும், ரிசர்வேஷன் செய்யாத பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சென்று பேருந்து ஏற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் மக்களுக்கு சரிவர சென்றடையததால் மக்கள் குழப்பினர். இதனால், குழந்தை மற்றும் வயதானவர்கள் பேருந்து கிடைக்காததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், முதலமைச்சருக்கும் அவரது மகனுக்கும் சினிமா படம் பார்த்து ரிவ்யூ சொல்ல தான் நேரம் இருக்கு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துதுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை புலம்ப வைத்துள்ளது இந்த நிர்வாக திறனற்ற திமுக அரசு. தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் புறப்படும் என்று அறிவித்து விட்டு திடீரென்று முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிளாம்பாக்கத்தில் பேருந்து என மக்களை அலைய வைக்கிறது அரசு. 

பொங்கல் முடிந்து தான் பொதுமக்களை ஊருக்கு அனுப்ப வேண்டும் என முதலமைச்சரும் போக்குவரத்துத்துறை அமைச்சரும் முடிவெடுத்து வைத்ததை போல ஆமை வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பேருந்து நிலையம் வந்தடைய மக்கள் நடக்க இயலாமலும் பல மணிநேரமாக காத்திருந்தும் பேருந்து கிடைக்காத அவலமும் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சருக்கும் அவரது மகனுக்கும் சினிமா படம் பார்த்து ரிவ்யூ சொல்ல தான் நேரம் இருக்கு.. மக்கள் படும் பாட்டை  எல்லாம் எப்படி பார்ப்பார்கள் என ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.  

click me!