முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் திருமண மண்டபத்தில் விபத்து.. பள்ளி மாணவர் பலி..!

By vinoth kumar  |  First Published May 14, 2022, 1:57 PM IST

உணவு பற்றாக்குறை காரணமாக கீழே உள்ள உணவை எடுப்பதற்கு சுமார் 4 பேர் லிப்ட்டில் ஏற்றி வந்தனர். அப்போது திடீரென லிப்ட் ரோப் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி சீத்தல் என்ற மாணவர் உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து, காயமடைந்த 3 பேரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்கு சொந்தமான மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11ம் வகுப்பு பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா நவீனுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தில் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது வழக்கம். நேற்று இந்த திருமண மண்டபத்தில்  கும்மிடிப்பூண்டியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. 

Tap to resize

Latest Videos

இதனையடுத்து, மணமக்களை வாழ்த்திய பின்னர் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்போது உணவு பற்றாக்குறை காரணமாக கீழே உள்ள உணவை எடுப்பதற்கு சுமார் 4 பேர் லிப்ட்டில் ஏற்றி வந்தனர். அப்போது திடீரென லிப்ட் ரோப் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி சீத்தல் என்ற மாணவர் உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து, காயமடைந்த 3 பேரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், உயிரிழந்த மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கேட்டரிங் சர்வீஸ் வேலை பார்ப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர் சீத்தால் (19) என்பது தெரியவந்தது. மேலும் இரண்டு பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் (21), ஜெயராமன் (25) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மண்டப உரிமையாளர் ஜெயப்ரியா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டு மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

click me!