அதிமுக உட்கட்சி விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையிடுவதா..? யாரையும் அனுமதிக்க மாட்டோம்.. சீறிய ஜெயக்குமார்

By Ajmal KhanFirst Published Jul 27, 2022, 2:10 PM IST
Highlights

திமுக ஆட்சியில் இல்லையென்றால் Modi Modi Go Go...! திமுக ஆட்சியில் இருந்தால் Modi Modi Come..Come என திமுகவினரின் ரைம்ஸ் ஆக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசை கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டம் இது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது எம்.ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் பாடலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொண்டர்களை குஷி படுத்த மேடையில் பாடிக் காண்பித்தார். இந்த பாடல்களை கேட்ட அதிமுக தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

பரபரப்பு.. போராட்டத்தில் மயங்கிய எடப்பாடி பழனிசாமி.. மேடையில் நின்றுக்கொண்டிருந்த போது திடீர் மயக்கம்..

அப்போது பேசிய ஜெயக்குமார். ஸ்டாலின் மூக்கு மேல் விரலை வைக்கும் வகையில் 4 ஆண்டுகள் மக்களுக்கான சிறப்பான ஆட்சியை தந்ததாக தெரிவித்தவர், விபத்தில் வந்த ஆட்சி இந்த திமுக ஆட்சி என விமர்சித்தார். நகர்ப்புற தேர்தலுக்கு முன்பு சொத்து வரியை உயர்த்தி இருந்தால் இங்கு காட்சி தலைகீழாக மாறி இருக்கும் என குறிப்பிட்டார். திமுகவின் முலதனமே பொய் தான்,  அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்திய துரோகிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்போம் அவர்களை ஓட ஓட விரட்டி அடிப்போம் என கூறினார். ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு பேசுவது தான் திராவிட மாடல் என்று ஜெயக்குமார் கூறினார். தொடர்ந்து பேசியவர். அதிமுக ஆட்சி காலத்தில் பிரதமர் மோடி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த தமிழகம் வந்தால் Modi Modi Go Go சொன்னார்கள்.. திமுக ஆட்சிக்கு வந்ததும்  MODI MODI COME COME..என கூறுகிறார்கள் இது தான் திமுவின் தற்போதைய ரைம்ஸ்ஆக இருப்பதாக விமர்சித்தார்.

சென்னைக்கு நாளை வரும் பிரதமர் மோடி.. இரண்டு நாட்கள் பலூன்கள் பறக்க விட தடை..

இந்த போராட்டத்திற்கு பிறகு செய்தியாள்ரகளிடம் பேசிய ஜெயக்குமார்,  சட்டம் ஒழுங்கு சீர்க்கேட்டை தடுத்த நிறுத்த திமுக அரசுக்கு வக்கில்லை எனவும், விளம்பரத்துக்கு தான் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது எனவும் அந்த விளம்பரங்களிலும் சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் ஹீரோ போல ஸ்டாலினே நடித்து வருவதாக விமர்சித்தார். 28 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியிடம் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார்,  அதிமுக உட்கட்சி பிரச்சனையில் மூன்றாம் நபர் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம், அதை பிரதமர் மோடியும் விரும்ப மாட்டார் என கூறினார்.

இதையும் படியுங்கள்

உலக நாடுகளுக்கு தெரிந்தவர் மோடிதான்.. எங்கே பிரதமர் போட்டோ..?? ஸ்டாலினை உலுக்கி எடுக்கும் ஆளுநர் தமிழிசை

 

click me!