திமுகவை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன்.. முன்னாள் அமைச்சர் ஆவேசம்..!

Published : Oct 27, 2021, 03:33 PM IST
திமுகவை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன்.. முன்னாள் அமைச்சர் ஆவேசம்..!

சுருக்கம்

கடந்த மக்களவை  தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றதைப் போலவே, 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, நிர்வாகிகள் மத்தியில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்;- கடந்த மக்களவை  தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றதைப் போலவே, 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. 

அதிமுக ஆட்சியில் மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய தற்போதைய ஆட்சியாளர்கள் தயாராக உள்ளனர். நடைபெறவுள்ள நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.

நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, ஆளும்கட்சியை ஒரு கை பார்க்காமல் விட மாட்டோம் என ஆவேசமாக பேசியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்: முதல்வர் பிறந்த நாளில் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு?
Magalir Urimai Thogai: பெண்களுக்கு கிடைக்கும் ரூ.2500.! இதை மட்டும் செஞ்சா போதும் 2 மடங்கு போனஸ் உறுதி.!