ADMK vs PMK : ராமதாஸை வீடு தேடி சென்று சந்தித்த சி.வி.சண்முகம்.. அதிமுக கூட்டணிக்கு அழைப்பா.? காரணம் என்ன.?

By Ajmal Khan  |  First Published Feb 6, 2024, 10:37 AM IST

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும்  மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் வகையில், அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தநிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட குழுக்களை அமைத்துள்ளது. இந்தநிலையில் திமுக தனது கூட்டணி கட்சியோடு முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை முதலமைச்சரின் வெளிநாடு பயணம் முடிவடைந்து தமிழகம் திரும்பியதுமம் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில் அதிமுக மற்றம் பாஜக இன்னும் கூட்டணி கட்சிகளை இறுதி செய்யவில்லை. இதனால் தொகுதி பங்கீடு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

பாமக, தேமுதிகவுடன் ரகசிய பேச்சு

கடந்த 5 வருடங்களாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக அந்த கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. தற்போது நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள மிகப்பெரிய கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதே போல பாஜகவும் பேச்சுவார்த்தையை மறைமுகமாக நடத்தி வருகிறது. இந்தநிலையல் பாமக நிறுவனர் ராமதாஸை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணி தொடர்பாக ஆலோசனையா.?

பாஜக தங்கள் கூட்டணிக்கு பாமகவை இழுக்க ஆலோசனை நடத்தி வரும் நிலையில், சி.வி.சண்முகம், ராமதாஸை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது பாமகவிற்கு 6 தொகுதிகளை வழங்க அதிமுக ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்த போதும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கவில்லையென இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

இந்தியா கூட்டணி ஆரம்பித்து ஒவ்வொரு மாநிலமாக சென்று டீ, டிபன் மட்டுமே சாப்பிட்டார்கள்.! வானதி சீனிவாசன் கிண்டல்

click me!