27 பேருக்கு கொரோனா பாதிப்பு.. முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆலைக்கு இழுத்து பூட்டுபோட்ட அதிகாரிகள்..!

By vinoth kumar  |  First Published Jun 6, 2021, 12:39 PM IST

ஊரடங்கை மீறி ரகசியமாக இயங்கி 27 தொழிலாளருக்கு கொரோனா தொற்றை பரப்பிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நடராஜனுக்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 


ஊரடங்கை மீறி ரகசியமாக இயங்கி 27 தொழிலாளருக்கு கொரோனா தொற்றை பரப்பிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நடராஜனுக்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. ஆனால், மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜூக்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 280 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கை மீறி செயல்பட்ட இந்த மில்லில் தொழிலாளர்கள் 15 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாளுக்கு முன்பு அங்கு மீண்டும் 9 தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வருவாய் துறையினர் ஆய்வு செய்து ஊரடங்கை மீறி ரகசியமாக இயங்கி 27 தொழிலாளருக்கு தொற்று பாதிக்க காரணமாக இருந்த மில்லுக்கு சீல் வைக்கப்பட்டனர்.

click me!