பாமக சொன்னதை செய்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்.. ராமதாஸ் வரவேற்பு..!

By vinoth kumarFirst Published Jun 6, 2021, 11:51 AM IST
Highlights

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மாணவர் நலன் கருதி தமிழகத்தில் இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;-12ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.

இக்குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும். இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதை பாமக நிறுவனர் ராமதாஸ், வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி இதைத் தான் வலியுறுத்தியது. நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும் என்று அவர் பதிவிட்டுளார்.

click me!