அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் அடுத்தடுத்து இணைந்து வரும் நிலையில், மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜலெட்சுமி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
போட்டி போடும் அதிமுக- பாஜக
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு நிர்வாகிகள் பல்டி அடிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அதிமுகவை காலி செய்யும் வகையில் அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களை பாஜக தங்களது அணிக்கு இழுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேரை பாஜகவில் இணைந்தது. இதற்கு பதிலடி கொடுக்க பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளை அதிமுக தங்கள் அணிக்கு இழுத்தது. நடிகை கவுதமி, சிறுபான்மை அணி தலைவி பாத்திமா ஆகியோரை இழுத்தது.
பாஜகவில் இணைந்த அதிமுக மாஜி எம்எல்ஏ
இதனையடுத்து இன்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைந்துக்கொண்டார். சென்னை தியாகராய நகரில் வசித்து வருபவர் வழக்கறிஞர் ராஜலட்சுமி, இவர் ஜெயலலிதா மீதான பற்றின் காரணமாக அக்கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலுக்கு எதிராக களம் இறங்கினார். இந்த தேர்தலில் 29ஆயிரத்து 204 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜலட்சும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்