அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதுதான் திமுகவின் விடியல் ஆட்சியின் சாதனையா என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் முன்னாள் சட்டபேரவை துணைதலைவரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமனை திமுகவினர் தாக்கியது தொடர்பாக அதிமுக கொரடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் புகாரளித்தனர். அதனைதொடர்ந்து எஸ். பி வேலுமணி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, ‘ கோதவாடி பகுதிகள் அங்கிருந்த விவசாயிகளுடைய நீண்ட நாள் கோரிக்கையான குளம் தூர்வாரப்பட்டது கடந்த ஆட்சிக்காலத்தில். அந்த குளத்தில் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் வைத்துக் கொண்டாடினார்கள்.
undefined
தொடர்ச்சியாக மழை பெய்து மழை அதிகமாக வந்து தண்ணீர் தேங்கி அந்த குளம் தொடர்ந்து பொதுமக்கள் எல்லாரும் பொங்கல் விழா நடைபெற்றது. அதற்கு சென்ற பொள்ளாச்சி ஜெயராமன் சட்டமன்ற உறுப்பினர் திராவிட முன்னேற்ற கழகத்தினர் மற்றும் அரசு பதவியில் இல்லாதவர்கள் அங்கே வந்து தகாத சம்பவம் நடைபெற்றுள்ளது.
மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். அதற்குப் பின்னாலும் பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்கு போட்டு உள்ளார்கள். அதற்கு எதிர்க்கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். தொடர்ச்சியாக தற்போது கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அதிமுக தொண்டர்கள் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு உள்ளார்கள்.
திமுகவில் பிரிவு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு திமுக மீது எந்த வழக்கும் போடவில்லை. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதுதான் திமுகவின் விடியல் ஆட்சியின் சாதனையா ? இத்தகைய தவறான போக்கை கண்டித்து மேற்கு மண்டல காவல்துறைத் தலைவரிடம் மனு கொடுத்துள்ளோம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்’ என்று கூறினார்.