தீபா பேரவையில் அதிமுக முன்னாள் நிர்வாகிகள் இணைந்தனர் – “சூடு பிடிக்கிறது அரசியல் ஆட்டம்”

Asianet News Tamil  
Published : Feb 01, 2017, 11:30 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
தீபா பேரவையில் அதிமுக முன்னாள் நிர்வாகிகள் இணைந்தனர் – “சூடு பிடிக்கிறது அரசியல் ஆட்டம்”

சுருக்கம்

கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயாலலிதா இறந்தார். இதையடுத்து, ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார்.  அதிமுக பொது செயலாளராக, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.

ஆனால், அதிமுக தொண்டர்கள் மத்தியில், அதிருப்தி நிலவியது. சசிகலா, அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி சசிகலா, பொது செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து, அதிமுகவினர் ஏராளமானோர், போஸ்டர், பேனர், கட்அவுட் அமைத்தனர். மேலும், தற்போதுள்ள அதிமுக தலைமையின் கீழ் பணியாற்ற விருப்பம் இல்லாமல், தீபா பேரவை துவங்கி செயல்பட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தரசாமி. ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளராகவும், குடிமங்கலம் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும், எல்.என். புதூர் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவராகவும், வடுகாபாளையம் ஊராட்சி மன்ற தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் சுந்தரசாமி, அவர் வகித்து வந்த சோமவாரப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு தலைவர் மற்றும் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், காவேரியம்மாள், முத்துலட்சுமி, ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இதைதொடர்ந்து, கோவை முன்னாள் மேயர் மலரவன் முன்னிலையில், சுந்தரசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஜெ.தீபா பேரவையில் இணைந்தனர். இவர்களை தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் பலர் இணைய இருப்பதாகவும் அவர், தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!