இன்று பட்ஜெட் தாக்கலாகுமா…? – “வேண்டும் பிஜேபி… வேண்டாம் காங்கிரஸ்…!!!”

Asianet News Tamil  
Published : Feb 01, 2017, 11:01 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
இன்று பட்ஜெட் தாக்கலாகுமா…? – “வேண்டும் பிஜேபி… வேண்டாம் காங்கிரஸ்…!!!”

சுருக்கம்

உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதற்கிடையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கண்ட மாநிலங்களில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. அதில், பட்ஜெட் அறிவிக்கும்போது, சாரம்சம் இருந்தால், தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினர்.

மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதற்கு விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், பட்ஜெட் கூட்டம் நடத்துவதால், எவ்வித பாதிப்பும் இல்லை என விளக்கம் அளித்தது.

இதைதொடர்ந்து 2017ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் நேற்று தொடங்கியது. அப்போது, கேரள எம்பி இ.அகமது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் இறந்தார். இதையடுத்து இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வது ஒத்தி வைக்கப்படும் என பேசப்பட்டது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இணை அமைச்சர்கள் சந்தோஷ்குமார் கங்வார், அசோக் லவசா ஆகியோர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்து பேசினர். அப்போது, பட்ஜெட் தாக்கல் செய்து குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

பின்னர், வெளியே வந்த அவர்கள், “இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது. இதற்கான முடிவை சபாநாயகர், தெரிவிக்க வேண்டும்” என கூறினர்.

இதற்கிடையில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்தவதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மறைந்த இ.அகமது, கேரளாவில் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக இருந்தவர். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என வாதம் செய்து வருகின்றனர். இதனால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.

இறுதியாக கிடைத்த தகவலின்படி, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்வது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?