நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க ! மன்மோகன் சிங்கைப் பார்த்து கத்துக்கோங்க ! நிர்மலா சீத்தாராமனை கலாய்த்த அவரின் கணவர் !!

By Selvanayagam PFirst Published Oct 14, 2019, 8:53 PM IST
Highlights

நாடு பொருளாதாரச் சுழலில் இருந்து விடுபட நரசிம்மராவ்-மன்மோகன் சிங் கொள்கையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் ஆலோசனை கூறியுள்ளார். இதற்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி கொடுத்துள்ளார் .

நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர், ஒரு அரசியல் பொருளாதார அறிஞர் . ஆந்திர அரசின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகரான இவர், தி இந்து பத்திரிகையில் "பொருளாதாரத்திற்கு வழிகாட்டும் ஒரு துருவநட்சத்திரம்" என்ற தலைப்பில் கட்டுரை  எழுதியுள்ளார்.

அதில், பாஜக அரசின் திட்டங்களுக்கு சர்தார் வல்லபாய் படேல் அடையாளச் சின்னமாக இருப்பது போல, அதன் பொருளாதாரக் கட்டமைப்புக்கு நரசிம்மராவ் உறுதியான அச்சாணியாக இருக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எல்லாத் துறைகளும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டுவரும் நிலையில், அரசோ அதை மறுக்கும் மனோநிலையிலேயே இருப்பதாகவும் பரகலா பிரபாகர் கூறியுள்ளார்.

பொருளாதாரம் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றிற்கு தீர்வு காண்பதற்கு தேவையான தொலைநோக்கு பார்வை மத்திய அரசுக்கு இருக்கிறது என கருதுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நரசிம்மராவ்-மன்மோகன் சிங் மேற்கொண்ட பொருளாதார மறுசீரமைப்பு இன்றைக்கும் அசைக்க முடியாததாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள  அவர் தற்போதைய கடினமான சூழ்நிலையில் பாஜக அரசிற்கு அதுவே துருவ நட்சத்திரம் போல வழிகாட்டும் என பரகலா பிரபாகர்  குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவரின் கருத்து குறித்து கருத்து தெரிவித்த  நிர்மலா சீதாராமன், கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படையான பொருளாதார சீர்திருத்தங்களை செய்துமுடித்து விட்டதாக என கூறியுள்ளார்.

தெரிவித்துள்ளார். நாங்கள் அடிப்படை சீர்திருத்தங்களைச்  செய்துள்ளோம்". ஜிஎஸ்டி, , ஆதார் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் போன்ற நடவடிக்கைகள் மூலம் நாடு பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டார்..

click me!