வேளாங்கண்ணி ஆலயமும், சாந்தோம் சர்ச்சும் இந்து கோயில்களாம்...? அதை மீட்க போராட்டம் துவக்கம்.. மோடி கையில் பகீர் ரிப்போர்ட்

By Vishnu PriyaFirst Published Oct 14, 2019, 6:21 PM IST
Highlights

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஒரு சென்சேஷனல் விவகாரம் போய்க் கொண்டிருக்கிறது. இதை சிலர் கவனித்திருக்க கூடும், பலர் சிரிப்புடன் அலட்சியம் செய்திருக்க கூடும். ஆனால் அந்த விஷயம் இன்று விஸ்வரூபம் எடுக்க துவங்கியுள்ளதுதான் விவகாரமே. 
அதாவது காஞ்சிபுரத்தில், நாற்பது ஆண்டுகளுக்குப் பின் நீரிலிருந்து வெளியே எடுத்து, பூஜிக்கப்பட்ட அத்தி வரதர் சிலை உலகின் கவனத்தையே தமிழகம் நோக்கி ஈர்த்தது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஒரு சென்சேஷனல் விவகாரம் போய்க் கொண்டிருக்கிறது. இதை சிலர் கவனித்திருக்க கூடும், பலர் சிரிப்புடன் அலட்சியம் செய்திருக்க கூடும். ஆனால் அந்த விஷயம் இன்று விஸ்வரூபம் எடுக்க துவங்கியுள்ளதுதான் விவகாரமே. 
அதாவது காஞ்சிபுரத்தில், நாற்பது ஆண்டுகளுக்குப் பின் நீரிலிருந்து வெளியே எடுத்து, பூஜிக்கப்பட்ட அத்தி வரதர் சிலை உலகின் கவனத்தையே தமிழகம் நோக்கி ஈர்த்தது. 

அத்திவரதர் வெளியே வந்த சில நாட்களிலேயே சர்வதேச அளவில் டிரெண்டிங் ஆனார். இந்த சூழலில் ‘அத்தி ஏசு’ எனும் தலைப்பில், ஏசுநாதரை அப்படியே அச்சு அசல் அத்திவரதரை போல் படுக்க வைத்தும், நின்ற கோலத்திலுமாக மர சிலைகள் செய்து வைரலாக்கினர் சில கிறுத்தவ அமைப்புகள். அத்தோடு நிற்கவில்லை, கடந்த நவராத்திரி சமயத்தில் முழுக்க முழுக்க ஏசு, கன்னிமேரி மற்றும் பைபிள் கதாபாத்திரங்கள் அடங்கிய சிலைகளை வைத்து பல கிறுத்தவ வீடுகளில் கொழு வைக்கப்பட்டன. இதுவும் வைரலானது. கூடவே சில கிராம தேவாலயங்களில் மரக்குச்சியில் சிலுவை செய்து நிறுத்தி, கிறுத்தவ பெண்கள் சுற்றி வந்து கும்மி அடித்தனர். 

இது இந்துக்களின் ‘முளைப்பாரி வைபவ’த்தின் பக்கா ஜெராக்ஸ். ‘ஏன் இப்படி இந்துக்களின் கடவுள் வழிபாட்டு முறையையும், சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் காப்பி அடிக்கிறார்கள். ஒரு வகையில் இது சந்தோஷம், மத நல்லிணக்கம்! என்றாலும் கூட, இந்துக்களின் தனித்துவத்தை சீர்குலைக்கும் செயலாக இருக்கிறதே.’ என்று  பல இந்து அமைப்புகள் குர்ல கொடுக்க துவங்கினர். ஆனால் இதற்கு சில பேராயர்களும், கிறுத்துவ மெஷினரி நிர்வாகிகளும், ஒன்று பதிலளிக்காமல் தவிர்ப்பது அல்லது ‘இந்த முறைகள் எல்லோருக்கும் பொது’ என்றும் பதிலளித்தனர். 


இது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.வினரை அதிக கடுப்பாக்கியது. ‘இத்தனை வருடங்கள் இல்லாமல் ஏன் இப்போது திடீரென இந்த சீண்டல்கள் தமிழகத்தில் நடக்கின்றன? மோடிக்கு எதிரான திராவிட இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தூண்டுதல் இதில் இருக்கிறதோ?’ என்று விமர்சிக்க துவங்கினர். இச்சூழலில், சமீபத்தில் சீன அதிபருடனான சந்திப்புக்காக மாமல்லபுரம் வந்திருந்த பிரதமர் மோடியிடம் மிக முக்கியமான் ஃபைல் ஒன்றை சகல ஆதாரங்களை இணைத்து தந்திருக்கிறதாம் தமிழக பாரதிய ஜனதாவின் நிர்வாகம். அந்த ஃபைலில் இருக்கும் தகவல்கள் திடுக்கிட வைக்கின்றன! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

அதாவது உலகளவில் பெயர் பெற்ற, தமிழகத்தில் இருக்கும் கிறுத்தவ ஆலயங்களான நாகை மாவட்டம் வேளாங்கண்ணி  கோயிலும், சென்னை சாந்தோமில் இருக்கும் தேவாலயமும் முன்பொரு காலத்தில் இந்து ஆலயங்களாக இருந்தவை! என்று கூறப்பட்டுள்ளதாம். வேளாங்கண்ணி ஆலயம் முன்பு அம்மன் கோயிலாகத்தான் இருந்தது.

கடல் சீற்ற பாதிப்பு மற்றும் வேறு சில காரணங்களால் அது இப்படி  கிறுத்தவ ஆலயமாக மாற்றப்பட்டுவிட்டது! அதேபோல் சாந்தோமில் இருந்த கபாலி கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் தேவாலயத்தை கட்டியுள்ளார்கள்! என்று கூறப்பட்டுள்ளதாம். இந்த இரு ஆலயங்களையும் மீட்டிடவும், மீண்டும் அங்கே இந்து கோயில்களை உருவாக்கிடவும்  வி.ஹெச்.பி.,  ஆர்.எஸ்.எஸ்., ஆகிய அமைப்புகளுடன் பா.ஜ.க.வும் இணைந்து வெளுத்தெடுக்கும் போராட்டத்தை திட்டமிட்டுள்ளது! என்கிறார்கள். சிக்கல்தான்!

click me!