மழைக்காலம் நெருங்கிவிட்டதால் கொரோனாவில் கவனம்: திருந்தாத மக்களுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது. பதறும் அதிகாரி

By Ezhilarasan BabuFirst Published Sep 15, 2020, 11:13 AM IST
Highlights

பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கு தளர்வு அறிவித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

முகக்  கவசம் உயிர்க்கவசம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், கடந்த 1ஆம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஊரடங்கு அமலில் இருந்தபோதே முகக்கவசம் அணிவதிலும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதிலும் பொதுமக்கள் போதிய அக்கறை காட்டவில்லை. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு வெளியில் சுற்றுபவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதில் பொதுமக்கள் மேலும் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

 

பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கு தளர்வு அறிவித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே கொரோனாவை விரைவாக ஒழிக்க முடியும் என்று தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் மக்கள் மத்தியில் கொரோனா அச்சமில்லை. பொது இடங்களில் அதிகமாகக் கூடி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:- ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வீடுகளை விட்டு வெளியில் வரும் மக்கள் முககவசம் அணிய மறக்கக்கூடாது. முகக் கவசம் உயிர்க்கவசம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். 

முகக் கவசம் அணிவதன் அவசியம் பற்றி தினமும் விழிப்புணர் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் நலன் கருதியும் சுற்றியிருப்பவர்களில் நலத்தை கருத்தில் கொண்டும் முகக்கவசம் அணிய மறக்கக்கூடாது. கொரோனா விலகும் வரையில் நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும். மழைக்காலம் தொடங்கி இருப்பதால் கூடுதல் கவனம் தேவை. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சிலர் மூன்று நாட்கள் வரை காத்திருந்து அதன் பின்னரே பரிசோதனைக்கு செல்கிறார்கள். காய்ச்சல் ஏற்பட்டு உடல் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமாகும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முடியும். அனைவரும் முககவசம் அணிய செய்து, தனிமனித இடைவெளியைத் பின்பற்றி நடக்க செய்ய வேண்டும். என்பது அவசியமாகும் என கூறியுள்ளார்.
 

click me!