சென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி வீட்டில் புகுந்தது வெள்ள நீர்..!

Published : Nov 24, 2020, 09:11 PM ISTUpdated : Nov 24, 2020, 09:12 PM IST
சென்னையில் தொடர்ந்து கொட்டும் மழை... கருணாநிதி வீட்டில் புகுந்தது வெள்ள நீர்..!

சுருக்கம்

சென்னை அருகே நிவர் புயல் மையம் கொண்டுள்ள நிலையில், சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டில் வெள்ள நீர் புகுந்தது.  

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று உருவானது. இன்று அது நிவர் புயலாக உருவெடுத்தது. தற்போது சென்னையில் இருந்து 450 கி.மீ. தொலைவில் புயல் நிலைக்கொண்டுள்ளது. இந்தப் புயல் நாளை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதனால். சென்னையில் நேற்று இரவு முதலே தொடர்ந்து மழை பெய்துவருகிறது. சென்னைப் புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால், தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழந்துள்ளது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டில் மழை நீர் புகுந்தது. போர்ட்டிகோ தொடர்ந்து வீட்டைச் சுற்றி மழை நீரால் கருணாநிதி வீடு சூழந்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!