அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜியை எதிர்த்து பாஜக அண்ணாமலை போட்டி..! தொகுதி விசயத்தில் அதிரடி காட்டிய பாஜக..!

By T Balamurukan  |  First Published Nov 24, 2020, 8:45 PM IST

அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி நின்றால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை தடாலடியாக தெரிவித்துள்ளார்.
 


அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி நின்றால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை தடாலடியாக தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

தமிழகத்தில் நெருங்கி வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக , பாஜகவுடன் கூட்டணி உறுதி என கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கடந்த 21ஆம் தேதி தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது விழா மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார். இருப்பினும் தொகுதி பங்கீடு போன்றவற்றைப் பற்றி இன்னும் உறுதியாக அவர்கள் தெரிவிக்கவில்லை.யூகத்தின் அடிப்படையில் 40 தொகுதிகள் என்றும் 50 தொகுதிகள் என்றும் தகவல் உலாவந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, "அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக நேரடியாக போட்டியிடும். ஏற்கனவே பழனி தொகுதியை நிச்சயம் பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள் என அண்ணாமலை கூறிய நிலையில் இன்று அரவக்குறிச்சி தொகுதியை அதிமுக தங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதை சூசகமாக  குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை. தொகுதி பங்கீடு ஆரம்பம் ஆவதற்குள் எந்த தொகுதி பாஜகவிற்கு வேண்டும் என்பதை அறிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.இது தற்போது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

click me!