எனக்கு இனி பேச்சே வராதா..? மே தினத்தில் சின்ன குழந்தை போல் கண்ணீர் விட்ட கேப்டன்... தேற்ற முடியாத பிரேமலதா..!

By Vishnu PriyaFirst Published May 1, 2019, 4:45 PM IST
Highlights

மே தினமான இன்று விஜயகாந்த், சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க. தலைமை கழகத்தில் தன்கட்சியின் தொழிற்சங்க பேரவையின் கொடியை ஏற்றி, ஐநூறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் வழங்குவதாக விழா ஏற்பாடானது. விழாவுக்கு வந்து நின்று விட்ட விஜயகாந்தால் கொடியை ஏற்றி, இழுக்க முடியவில்லை. 

விஜயகாந்துக்கு தன் பிறந்த நாளை விட, தான் கட்சி துவக்கிய நாளை விட, தான் முதன் முதலாக எம்.எல்.ஏ.வான நாளை விட, எதிர்கட்சி தலைவர் நாற்காலியில் அமர்ந்த நாளை விட மிகவும் பிடித்த நாள் ‘மே 1’ எனப்படும் தொழிலாளர் தினம்தான். காரணம், அடிப்படையில் அவரும் சமரசமில்லாத உழைப்பாளி. மேலும் உழைக்கும் வர்க்கம்தான் அவரை மாஸ் ஹீரோவாக சினிமாவில் உயர்த்திக் கொண்டாடியதோடு, அரசியலிலும் வெற்றி பெற வைத்தது. இன்றும் தே.மு.தி.க. உயிர்ப்போடு இருந்து கொண்டிருக்கிறதென்றால் அதற்கு காரணம் இந்த பாட்டாளி வர்க்கம் தான். 

அதனால்தான் மேலே சொன்ன மற்ற நாட்களை விட மே தினத்தை மிக சிறப்பாக கொண்டாடுவார்.  அன்று தமிழகத்தில் ஏதோ ஒரு மாவட்டத்தில் மே தின பொதுக்கூட்டத்தை நடத்தி, நல திட்ட உதவிகளும் தந்து மகிழ்வார். மக்கள் நலனில் அக்கறையின்றி ஆளும் வர்கத்துக்கு எதிராக மே தின மேடையில் விஜயகாந்த் பேசும் பேச்சுக்கு மிகப்பெரிய வைபரேஷன் ஒவ்வொரு ஆண்டும் வெளிப்படும். 

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உடல் நலன் குன்றி அவஸ்தைப்பட்டு வருகிறார் கேப்டன். அதிலும், பேச்சுத் திறனை ஏகத்துக்கும் இழந்துவிட்டார். அமெரிக்காவுக்கே சென்று சிறப்புச் சிகிச்சைகளும், பயிற்சிகளும் எடுத்தும் கூட சொல்லிக் கொள்ளும் படியான முன்னேற்றமில்லை. கிளிப்பிள்ளைக்கு பேச கற்றுக் கொடுத்தால் அது தத்தித் தத்தி ஏதோ பேச முயற்சிப்பது போல்தான் விஜயகாந்தின் பேச்சு இருக்கிறது. முழுமையாகவோ, முழு வடிவத்துடனோ எதையும் பேசும் திறனில்லாமல் இருக்கிறார் ‘திராணியார்’ என்று கொண்டாடப்பட்டவர். 

இந்நிலையில் மே தினமான இன்று விஜயகாந்த், சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க. தலைமை கழகத்தில் தன்கட்சியின் தொழிற்சங்க பேரவையின் கொடியை ஏற்றி, ஐநூறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் வழங்குவதாக விழா ஏற்பாடானது. விழாவுக்கு வந்து நின்று விட்ட விஜயகாந்தால் கொடியை ஏற்றி, இழுக்க முடியவில்லை. எனவே பிரேமலதாதான் கொடியை ஏற்றினார். பாவம் கேப்டனால் அந்த கொடிக்கு தெம்பாக ஒரு சல்யூட் கூட அடிக்க முடியவில்லை. கேப்டனிடம் இலவச சீருடை வாங்க வந்த ஆட்டோ டிரைவர்கள் உணர்ச்சிவசப்பட்டு ‘கேப்டன் நீங்க சீக்கிரம் பழையபடி பேசணும்! கேப்டன் மறுபடியும் நீங்க கர்ஜிக்கணும் மேடையில! தலைவா சீக்கிரம் களத்துக்கு வா!’ என்றெல்லாம் ஆதங்கத்தையும், பிரயாசையையும் கொட்டித் தீர்த்துவிட்டனர். 

இதை சின்ன சிரிப்புடன் கவனித்துக் கொண்ட விஜயகாந்த், பின் அலுவலகத்தினுள் வைத்து ‘என்னால பழையபடி நல்லா பேச முடியாதா? எனக்கு பேச்சே வராதா?’ என்று பிரேமலதாவிடம் சைகையிலும், புரியாத வார்த்தைகளிலும் கேட்டிருக்கிறார். அப்போது கண்ணீர் வடிந்திருக்கிறது. சிறு குழந்தையைப் போல் கேப்டன் உடைந்தழுதது பெரிய அதிர்ச்சியாகி இருக்கிறது  அங்கிருந்த சுதீஷ் மற்றும் பார்த்தசாரதிக்கு. அவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணற, பிரேமலதாவோ  சட்டென்று  உடைந்து கண்ணீர் விட்டவாரு ‘நான் உங்களை சரி பண்ணிடுவேன்! கவலைப்படாதீங்கப்பா’ என்றபடியே கேப்டனின் கூலிங் கிளாஸை தாண்டி வழிந்த கண்ணீரைத் துடைத்திருக்கிறார். கேப்டன் இந்த தமிழ்நாட்டின் நலன் மேல் காட்டிய அக்கறையில் பாதியையாவது தன் உடல் மீதும் காட்டியிருக்கலாம்!

click me!