ஸ்டாலினுக்கு எதிராக சென்னையில் முதல் குரல் !! அழகிரி ஆதரவாளர்கள் அதிரடி நீக்கம்..

By Selvanayagam PFirst Published Sep 4, 2018, 9:06 AM IST
Highlights

நாளை சென்னையில் நடைபெறவுள்ள  பேரணியில் பங்கேற்க சென்னை வந்த அழகிரியை விமான நிலையம் சென்று வரவேற்ற தென் சென்னை மாவட்ட வேளச்சேர் கிழக்குப்  பகுதி செயலாள் ரவி திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததில் இருந்தே அக்கட்சிக்கு எதிராக முக.அழகிரி பேசி வருகிறார். கருணாநிதி இறந்த மூன்றாவது நாளே அவரது சமாதியில் பேட்டி அளித்த அழகிரி தன்னுடன்தான் திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என கொளுத்திப் போட்டார்.

மேலும் கருணாநிதி மறைந்த 30 ஆவது நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி அதாவது நாளை சென்னையில் லட்சம் பேர் பங்கேற்கும்  பேரணி ஒன்றை நடத்த்ப் போவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந் 28 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் எந்தவித எதிர்ப்பும் இன்று ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்படடார்.

அதே நேரத்தில் மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் பேரணி நடத்துவது குறித்து அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அப்படி சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள தயார் எனவும் தெரிவித்தார்.

ஆனால் இது எதையுமே ஸ்டாலின் கண்டு கொள்ளவிலலை. இதையடுத்து நாளை பேரணி உறுதியாக நடைபெறும் என அழகிரி அறிவித்தார்.

இந்நிலையில் பேரணியில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த அழகிரியை தனது ஆதரவாளர்களுடன்  தென் சென்னை வேளச்சேரி கிழக்குப் பகுதி  செயலாளர்  ரவி வரவேற்றார். இதனால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.

திமுகவினர் யாரும் அழகிரிக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் என நினைத்திருந்த நிலையில் ஸ்டாலினுக்கு எதிராக முதல் குரல் சென்னையில் எழுந்துள்ளது. இதையடுத்து ரவி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். திமுக பொது செயலாளர் அன்பழகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

click me!