தேசிய நலவாழ்வு குழும பணியில் முதல் திருநங்கை! ஸ்டாலின் அடித்த அடுத்த சிக்ஸர்.

Published : Mar 25, 2022, 12:12 PM ISTUpdated : Mar 25, 2022, 12:26 PM IST
தேசிய நலவாழ்வு குழும பணியில் முதல் திருநங்கை! ஸ்டாலின் அடித்த அடுத்த சிக்ஸர்.

சுருக்கம்

இதற்கான ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தமிழகத்தில் முதல் முறையாக தேசிய நலவாழ்வு குழுமத்தின் உதவியாளராக திருநங்கை ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ்  திட்ட உதவியாளராக முதல்முறையாக திருநங்கை தமிழ்ச்செல்வி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவருக்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பணி நியமன ஆணை வழங்கினார். சென்னை திநகரில் உள்ள தனியார் விடுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கான மாநில அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். அதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது  தேசிய நல்வாழ்வு குடும்பத்தின் திட்ட உதவியாளராக  தமிழ்செல்வி என்ற திருநங்கைக்கு பணிநியமனம் ஆணை வழங்கப்பட்டது.

இதற்கான ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தமிழகத்தில் முதல் முறையாக தேசிய நலவாழ்வு குழுமத்தின் உதவியாளராக திருநங்கை ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டையை பூர்வீகமாக கொண்ட தமிழ் செல்வி தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் திருநங்கை செவிலியர் ஆவார். தேசிய நலவாழ்வு குடும்பத்தின் கீழ் திருநங்கைகளுக்கான சிகிச்சை மையங்கள் மதுரை மற்றும் சென்னையில் உள்ளன. இவற்றில் சென்னையில் தமிழ்ச்செல்வி பணிபுரிய உள்ளார்.

இதனையடுத்து மேடையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழகத்தைப் பொறுத்தவரையில் உணவு மாதிரி ஆய்வகங்கள் ஒன்றுதான் இருந்தது அதனால் உணவு பரிசோதனை செய்து முடிவு வரும்வரை காத்திருக்கும் நிலையில் இருந்தது.தற்போது சென்னையில் மட்டும் இல்லாமல் தஞ்சாவூர் மதுரை பாளையங்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஆறு மாவட்டங்களில் உணவுப் பரிசோதனை மையங்கள் உள்ளது என்றார்.

அப்போது வடபழனி முருகன் கோவில் பிரசாத கடைகளில் உணவுப்  பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனை மேற்கோள்காட்டிய பேசிய அவர்,  உணவுத் துறையில் பணியாற்றும் நீங்கள் பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படக்கூடாது. சரியான உணர்வுடன் செயல்பட வேண்டும், உணவு பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, 379 திருக்கோயில்களில் பிரசாதம் வழங்குவதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 90 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ஒரு டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, நடவடிக்கை எடுக்கப்பட்ட 9 நிறுவனங்கள் மீது சீல் வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார் .

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு தருணங்களிலும் சமூக நீதி இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை முறையாக கடைப்பிடித்து வருகிறது. அந்த வகையில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், பெண்களும் அர்ச்சகராகலாம் என அறிவித்து அதற்கான ஆணைகளை வழங்கியது. அதேபோல் நடந்துமுடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மொத்தம் 21 மாநகராட்சிகளில் 11  மாநகராட்சி மேயர் பதவிகளை பெண்களுக்கு வழங்கியது திமுக. குறிப்பாக சென்னை மாநகராட்சி மேயராக முதல்முறையாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மோயராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்தான் சமூகத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்டு வரும் திருநங்கைகளை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் முதல் முறையாக தேசிய நலவாழ்வு குழுமத்தின் உதவியாளராக திருநங்கை தமிழ்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இது முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அதிரடியாகவே பார்க்கப்படுகிறது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!