சீனியர்களுக்கு முதல் மரியாதை... மூத்த நிர்வாகிகளை நெகிழ வைக்கும் உதயநிதி..!

By Selva KathirFirst Published Sep 13, 2019, 10:42 AM IST
Highlights

திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான சுற்றுப்பயணத்தின் போது கட்சியின் சீனியர்களுக்கு உதயநிதியிடம் இருந்து முதல் மரியாதை கிடைத்து வருகிறது.

திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான சுற்றுப்பயணத்தின் போது கட்சியின் சீனியர்களுக்கு உதயநிதியிடம் இருந்து முதல் மரியாதை கிடைத்து வருகிறது.

ஒவ்வொரு மண்டலமாக சென்று இளைஞர் அணியின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக உதயநிதி ஆய்வு செய்து வருகிறார். தற்போது இளைஞர் அணி நிர்வாகிகளாக உள்ளவர்கள் இதுவரை கட்சிக்கு என்ன செய்துள்ளார்கள், பொதுவான பணிகள் என்னென்ன, வழக்கு விவரம் உள்ளிட்டவற்றை சேகரித்து அவர்களின் செயல்பாடுகளை உதயநிதியே நேரடியாக மதிப்பிடுகிறார். திருச்சி, மதுரை மண்டல ஆய்வு முடிந்துள்ளது. 

இளைஞர் அணிச் செயலாளர் என்பதால் உதயநிதியை சந்திக்க அதிகம் அந்த அமைப்பு தொடர்பான நிர்வாகிகள் தான் அதிகம் வருகின்றனர். ஆனாலும் கூட ஸ்டாலின் மகன் என்கிற காரணத்தால் சீனியர்களும் உதயநிதி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்து அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு செல்கின்றனர். இப்படி சீனியர்கள் யாராவது வந்தாலும் உடனடியாக அவர்களை சந்திக்க உதயநிதியிடம் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். 

கட்சி நிர்வாகிகள் மட்டும் அல்லாமல் தொண்டர்களையும் கூட தான் வெளியே வரும் போது மொத்தமாக சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு போய்ட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு தான் உதயநிதி செல்கிறார். மிகவும் சீனியர் நிர்வாகிகள் என்றால் அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடிச் சென்று உதயநிதி மரியாதை செய்து வருகிறார். இதனால் திமுகவில் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் வரை அடி மட்டத் தொண்டர்கள் வரை உதயநிதி எளிதாக ரீச் ஆகிறார்.

மேலும் இளைஞர் அணியில் ஆக்டிவாக இல்லாதவர்களை எளிதாக கண்டுபிடித்து மேலும் ஒரே ஒரு வாய்ப்பு தான் என்று நிதானமாக கூறுகிறார். மேலும் நீர்நிலைகள் தூர்வாறும் பணிகளை சீரியசாக செய்ய வேண்டும் என்று ஆர்டர் போடுகிறார். இப்படி இளைஞர் அணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தை கட்சியின் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் மற்றும் அனைத்து தரப்பினரையும் ஏற்கச் செய்யும் வகையில் உதயநிதி நடத்தி வருவது கட்சிக்குள் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் செல்லும் இடங்களில் எல்லாம் தனியாக சந்திப்பதை உதயநிதி ஒரு போதும் தவிர்ப்பதில்லை. தொடர்ந்து ரசிகர் மன்றத்தில் பணியாற்றுமாறும் தேர்தல் சமயங்களில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு ஊக்கம் அளித்துவிட்டு அடுத்த பணிகளுக்கு உற்சாகத்துடன் புறப்படுகிறார் உதயநிதி.

click me!