First Dalit mayor: சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல் தலித் பெண் மேயராகிறார் Priya Rajan.. திமுக சாதனை.

Published : Mar 03, 2022, 06:19 PM IST
First Dalit mayor: சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல் தலித் பெண் மேயராகிறார் Priya Rajan.. திமுக சாதனை.

சுருக்கம்

அதேபோல் சென்னை மேயர் பதவி எஸ்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் பிரியாவுக்கு கிடைத்துள்ளது. அதேபோல் இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கைச் சிவத்தின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் தலைநகர் மேயர் பதவியை அலங்கரிப்பதற்காக தேர்தலில் திமுக சார்பில் பிரியா ராஜன் களமிறக்கப்பட்டுள்ளார். நிச்சயம் அவர் மேயராக வெல்வது உறுதியாகியுள்ளது. இதன் மூலம்  323 ஆண்டுகால சென்னை மாநகராட்சி வரலாற்றில் தலித் பெண் ஒருவர் மேயராவது இதுவே முதல் முறையாகும். சென்னையின் மூன்றாவது பெண் மேயராகவும் பிரியா பதவியேற்க உள்ளார். இதற்கு முன் தாரா செரியன் மற்றும் காமாட்சி ஜெயராமன் ஆகியோர் மேயர்களாக இருந்துள்ளனர். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் 200 வார்டுகளில் திமுக 153 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 15 வார்டுகளிலும், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா 4 வார்டுகளிலும், அதிமுக 15 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாஜக, அமமுக தலா 1 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் 21 ஒரு மாநகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், நகராட்சி துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், பேரூராட்சி துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

இதில் கவுன்சிலர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில் கூட்டணி காட்சிகளுக்கான பதவிகள் விவரத்தையும் திமுக இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னை மேயர் இருக்கையை சென்னை மாநகராட்சியின் வரலாற்றில் முதல்முறையாக தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அலங்கரிக்க உள்ளார். 74வது வார்டில் திருவிக நகரில் திமுக சார்பில் களம் கண்டவர்தான் 21 வயது  எம் காம் பட்டதாரியான பிரியா ராஜன். இவருக்குதான் தற்போது இளம் வயதிலேயே மேயராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 18 வயதில் திமுகவில் இணைந்த இவர் திமுகவின் போராட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். இவரது தந்தை அப்பகுதியில் திமுக இணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவரது குடும்பம் பாரம்பரியமான திமுக குடும்பம் ஆகும்.

இவர் சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்தவர் ஆவார். இந்நிலையில் தாய் மேயர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள நிலையில் பேட்டி கொடுத்துள்ள பிரியா ராஜன், கடந்த சட்டசபைத் தேர்தலில் வென்று முதல்வராகியுள்ளார் ஸ்டாலின், தற்போது நிறைய வித்தியாசமான மாற்றங்களை செய்து வருகிறார். அதில் நானும் பங்கு கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். எங்கள் ஏரியா மக்கள் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட பிரச்சினைகள் பிரதானமாக உள்ளது. இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். வழக்கமாக தென் சென்னையை சேர்ந்தவர்களுக்கு மேயர் வாய்ப்பு கிடைத்து வந்த நிலையில் வட சென்னையைச் சேர்ந்த பிரியா ராஜனுக்கு திமுக தலைமை வாய்ப்பு கொடுத்துள்ளது.  

அதேபோல் சென்னை மேயர் பதவி எஸ்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் பிரியாவுக்கு கிடைத்துள்ளது. அதேபோல் இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கைச் சிவத்தின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் நாளை நடைபெறவிருக்கும் மறைமுக தேர்தலில் பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டு மேயராக பதவி ஏற்க உள்ளார் என்பது உறுதியாகி விட்டதால் சென்னையின் மூன்றாவது பெண் மேயர் என்பதுடன்,  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல்  பெண் மேயர் என்ற அந்தஸ்தை பிரியா ராஜன் பெற உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!