பட்டாசு கடை விபத்து.. உடல் சிதறி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உடனே நிவாரண அறிவித்த முதல்வர் ஸ்டாலின்.!

By vinoth kumarFirst Published Oct 27, 2021, 8:03 AM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் முருகன் என்பவரின் பட்டாசு கடை ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு பட்டாசு கடையில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்துச் சிதறியன.

சங்கராபுரம் பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் முருகன் என்பவரின் பட்டாசு கடை ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு பட்டாசு கடையில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்துச் சிதறியன. தீ மளமளவெனஅடுத்தடுத்து கடைகளுக்கும் பரவியது. பேக்கரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதனால், கடுமையான சேதங்கள் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கடைகளில் இருந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இந்நிலையில், பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் நேற்று மாலை பட்டாசு கடை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்து காரணமாக  ஐந்து நபர்கள் உயிரிழந்தது குறித்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

விபத்தில் காலமானவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 5 லட்சம் முதலமைச்சரின் நிவாரண உதவி லிருந்து வழங்கவும், தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!