ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு

 
Published : Jan 04, 2018, 08:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு

சுருக்கம்

FIR on Jignes mevani and umar kalith

பீமா கோரிகான் கலவரம் விவகாரம்

குஜராத் மாநில தலித் தலைவரும் , சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானி, டெல்லிஜவஹர்லால் பல்கலையின் மாணவர் அமைப்புத் தலைவர் உமர் காலித் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பீமா கோரிகான் கலவரத்தை தூண்டிவிட்டதாக புனே போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

பீமா கோரிகான் வெற்றி

ஆங்கிலேயஇந்திய படைக்கும், பேஷ்வா படைக்கும் 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரில்பேஷ்வா படை ஆங்கில இந்திய படை தோற்கடித்தது. அந்த படையில், ஏராளமான தலித் மக்கள் வீரர்களாக இருந்தனர். பீமாகோரிகான் இடத்தில் கிடைத்த வெற்றியை கடந்த 200 ஆண்டுகளாக தலித் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

சர்ச்சை  பேச்சு
அதேபோல், இந்த ஆண்டு கடந்த 31-ந்தேதி கொண்டாடினர். அப்போது, இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக குஜராத் எம்.எல்.ஏ.வும், தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, டெல்லி ஜே.என்.யூ. பல்கலை மாணவர் அணித் தலைவர் உமர் காலித்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புனேயில் உள்ள சைனிவர்தா பகுதியில் நடந்த கூட்டத்தில் ஜிக்னேஷ் மேவானி,உமர் காலித் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாகக் கூறப்படுகிறது.

கலவரம்

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து புனே நகரில் ஏற்பட்ட கலவரத்தில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். அதன்பின் தீவிரமடைந்த கலவரம் மும்பை வரை பரவியது. கடையடைப்பு, தீவைப்பு, பஸ் கண்ணாடிகள் உடைப்பு, ரெயில் மறியல் என பதற்றமானது. பின்னர் போலீசாரின் நடவடிக்கையால் கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

போலீசில் புகார்

இந்நிலையில், எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித் சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கலவரத்தை தூண்டிவிட்டதாக புனேயில் உள்ள விஸ்ராம் பாக் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அக்‌ஷய் பிகாத்(வயது22), ஆனந்த் தோன்ட்(25) ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மேவானி, உமர் காலித் மீதும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

எப்.ஐ.ஆர். பதிவு

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அபாசாகேப் செவாலே கூறுகையில், “ எம்.எல்.ஏ.ஜிக்னேஷ் மேவானி, மாணவர் அமைப்பு தலைவர் உமர் காலித் ஆகியோர் பேசிய பேச்சுகளை நாங்கள் ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் உமர் காலித், மேவானி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கையை புதன்கிழமை இரவு பதிவு செய்தோம். இவர் இருவர் மீது ஐ.பி.சி. 153ஏ, 505, 117 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். 

 

 

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்