கட்டுக் கட்டாய் கோடி கோடியாய் சிக்கிய பணம்... வசமாக சிக்கிய துரைமுருகன் மகன்..!

By Thiraviaraj RMFirst Published Apr 10, 2019, 1:23 PM IST
Highlights

வருமான வரி சோதனை நடத்தி ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்ட  மூன்று பேர் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

வருமான வரி சோதனை நடத்தி ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்ட  மூன்று பேர் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர், காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை முடிந்த நிலையில் துரைமுருகன் வீட்டிலிருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் திமுகவின் தேர்தல் வியூகம் தொடர்பான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அள்ளிச் சென்றதாக கூறப்பட்டது. 

இதனையடுத்து கைப்பற்ற ஆவணங்கள் அடிப்படையில் துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர் அலி, பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது. அந்த குடோனில் சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள், துணிப் பைகள் ஆகியவற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் வேலூரில் ரூ.11.48 கோடி பறிமுதல் விவகாரத்தில் பூஞ்சோலை சீனிவாசனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். மேலும் பூஞ்சோலை சீனிவாசன் மீது பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது திமுக தலைமைக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

click me!