
தூத்துக்குடியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த சில தினங்களாக தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடும் வெயில் என்றும் பாராமல் காலை முதலே தொடங்கும் பிரச்சாரம் இரவு வரை தொடர்கின்றது. தூத்துக்குடி முழுவதுமுள்ள அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு அங்குள்ள மக்களிடம் பாஜகவிற்கு ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு வருகின்றார்.
மேலும் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்கள் மற்றும் பாஜக செயல்படுத்திய பல முக்கிய திட்டங்கள் மருத்துவ காப்பீடு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் என பல திட்டங்களை பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிலையில் உப்பள தொழிலாளர்களிடம் ஓட்டு கேட்க சென்ற போது அங்கு தொழிலாளர்கள் அவருக்கு அன்புடன் உப்பு பாக்கெட்டுகளை பரிசாக வழங்கியுள்ளனர். அப்போது தேர்தல் நெருங்கி வருவதை போலவே பாஜகவின் வெற்றியும் நெருங்கி வருகிறது என அந்த மக்களிடம் தெரிவித்து, செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் இதே கருத்தை தெரிவித்தார் பாஜக தமிழக தலைவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.