நிதி நிறுவனங்கள் அட்ராசிட்டி.. இஎம்ஐ கொடுமை, அலறியடித்து டிஜிபி அலுவலகம் ஓடிவந்த லாரி உரிமையாளர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Jul 10, 2021, 9:58 AM IST
Highlights

புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், தாங்கள் கொரோனா கால ஊரடங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தார்.

வாகனங்களுக்கு நிதி வழங்கும் நிதி நிறுவனங்களின் முறைகேடு மற்றும் மிரட்டல்களை கட்டுப்படுத்தகோரி டி.ஜி.பி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக இ.எம்.ஐ கட்டமுடியாமல் தவித்து வரும் வாகன உரிமையாளர்களை தனியார் நிதி நிறுவனம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும்,வாகனங்களுக்கு நிதி வழங்கும் நிதி நிறுவனங்களின் முறைகேடு மற்றும் மிரட்டல்களை கட்டுபடுத்த காவல் துறையின் மூலம் தனி விசாரணை அதிகாரியை நியமிக்க கோரி தமிழ்நாடு தலைமை காவல் இயக்குனர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், தாங்கள் கொரோனா கால ஊரடங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தார்.மேலும், தமிழகத்தில் வாகன கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் கொரோனா பாதிப்பால் ஓரிரு மாதங்கள் தவணை செலுத்த  தவறும் வாகனங்களை பறிமுதல் செய்துவிடுவதாகவும், மத்திய அரசால் ஆர்.பி.ஐ ஆணையிட்டுள்ள இ.எம்.ஐ 6 மாதங்களுக்கு வசூலிக்க கூடாது என்ற உத்தரவை ஸ்ரீராம் பைனான்ஸ் போன்ற இந்நிறுவனங்கள் பின்பற்றாமல் மிரட்டல் மூலம் வாகனங்களை பறிமுதல் செய்வதாகவும், சில உரிமையாளர்களிடம் "வாகனங்களை ஒப்படைத்தால் எந்த பிரச்சனையும் இல்லை" என கூறி வாகனங்களை பறிமுதல் செய்து அடிமாட்டு விலைக்கு விற்பதாகவும் குற்றஞ்சாட்டினார். 

இதனை மாற்றும் வகையில் வாகனத்தை குறிபிட்ட தொகைக்குதான் விற்க வேண்டும் என்ற குறியீட்டு தொகையினை நிர்ணயிக்க வேண்டும் எனவும் வேண்டுகொள் விடுத்தார்.மேலும் ஊரடங்கு பாதிப்பால் வேலையின்மை காரணமாக இ.எம்.ஐ  கட்டமுடியாத வாகன உரிமையாளர்களின் பிணையாளர்களுக்கு நேரிலும், அலைபேசியிலும் மிரட்டல் விடுப்பதாகவும் சொத்தை பறிமுதல் செய்வதாகவும் தெரிவித்த அவர், தங்கள் நிலையை உணராமல் மிரட்டல் விடுப்பது தங்களை தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு உள்ளது எனவும் கூறினார். மேலும், இதன் காரணமாக சமீபத்தில் பிணையாளர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ள லாரி உரிமையாளர்கள் தங்கள்  வாழ்வாதரத்தை காக்கும் வகையில் நிதி நிறுவனங்களின் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் வகையில் ஐ.ஜி பொறுப்பிலுள்ள ஒருவரை தனி காவல்துறை அதிகாரியாக நியமித்து வாகன உரிமையாளர்கள் மிரட்டலுக்கு ஆளாகத வண்ணம் நடவடிக்கை எடுக்ககோரி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாகவும் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

click me!