அம்பலமானது அதிமுகவின் உச்சகட்ட உட்கட்சி பூசல்... அமைச்சரோடு மோதிய மாஜி!! மண்டையை பிய்த்துக் கொள்ளும் தலைமை...

By sathish kFirst Published Sep 22, 2018, 12:59 PM IST
Highlights

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை  ராணுவத்தைப் போன்று இருந்த அதிமுகவின் நிலமை இப்போது தலைகீழாக மாறி இருக்கிறது. ஜெயலலிதா போன்ற ஒரு அரசியல் ஆளுமைக்கு கட்டுப்பட்டு நின்ற, அதிமுக எம்.எல்.ஏக்களும், எம்பிக்களும், இப்போது அப்படி ஒரு ஆளுமையின் கீழ் தாங்கள் இல்லை என்பதனால் ,தங்கள் கட்டுப்பாட்டை இழந்திருக்கின்றனர். 

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை  ராணுவத்தைப் போன்று இருந்த அதிமுகவின் நிலமை இப்போது தலைகீழாக மாறி இருக்கிறது. ஜெயலலிதா போன்ற ஒரு அரசியல் ஆளுமைக்கு கட்டுப்பட்டு நின்ற, அதிமுக எம்.எல்.ஏக்களும், எம்பிக்களும், இப்போது அப்படி ஒரு ஆளுமையின் கீழ் தாங்கள் இல்லை என்பதனால் ,தங்கள் கட்டுப்பாட்டை இழந்திருக்கின்றனர். 

மேலும் தற்போது இருக்கும் தலைமையை முழுமனதாக பெரும்பாலான அதிமுக புள்ளிகளால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இதன் விளைவாக அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிககரித்து  இருக்கிறது. முதல்வர் என்று கூட பாராமல் எடப்பாடியை எதிர்த்து வருகின்றனர் அதிமுக எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும், சமீபத்தில் சென்னையில் வைத்து நடந்த, மாவட்ட செயலர்கள் கூட்டத்தின் போது கூட  எடப்பாடியின் முன்னிலையிலேயே மோதிக்கொண்டனர் முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமியும், தற்போதைய அமைச்சர், வேலுமணியும். 

இதுவே ஜெயலலிதா இருந்திருந்தால் இவர்கள் எல்லாம் வாய் திறந்து பேசி இருப்பார்களா என்பதே சந்தேகம் தான்.
ஜெயலலிதா இருந்த வரை ஒவ்வொரு அசைவிலும் கூட கவனமாகவும் மரியாதையுடனும் செயல்பட்டு வந்தனர் அதிமுக புள்ளிகள். ஏதாவது சிறு தவறு நேர்ந்தால் கூட பதவி போய்விடுமே என்ற பயம் அப்போது அனைவரிடமுமே இருந்தது. 

ஆனால் இப்போது அவர் இல்லை என்பதால் தங்கள் பதவி குறித்த பயம் இல்லாமல், தைரியமாகவும் திமிறாகவும் நடந்து கொள்கின்றனர். தொகுதி மக்களிடமும் கூட இதே போல தான் அமைச்சர்கள் நடந்துகொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு எதிராக ஒரு கூட்டமே இப்போது தொகுதி பக்கம் சேர்ந்திருக்கிறது.

அதிமுகவில் இருக்கும் முக்கியபுள்ளிகளில் யார்? யாருக்கு? எதிராக இருக்கின்றார். என்று பட்டியல் போட்டு சொல்லுமளவிற்கு ஆகி இருக்கிறது இப்போதைய நிலைமை. சென்னையில், அவைத் தலைவர் மதுசூதனனுக்கும், அமைச்சர் ஜெயகுமாருக்கும் பனிப்போர் தொடந்து கொண்டிருக்க,  திருப்பூர் மாவட்டத்திலோ, அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கும், துணை சபாநாயகர், ஜெயராமனுக்கும், இடையே பூசல் நிலவுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில், எம்.பி., வைத்திலிங்கத்திற்கும், அமைச்சர் துரைக்கண்ணுவிற்கும் இடையிலும், கடலுார் மாவட்டத்தில், அமைச்சர் சம்பத்திற்கு எதிராக பிற எம்.எல்.ஏக்கள் என மொத்த அதிமுக புள்ளிகளுமே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள காத்திருக்கும் போர் வீரர்கள் போல தயார் நிலையில் இருக்கின்றனர். 

அவ்வப்போது மோதிக்கொள்ளவும் செய்கின்றனர் மேலும் எடப்பாடிக்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் அரசுவிழாக்களை புறக்கணித்து  வருகின்றனர். நாகப்பட்டினத்தில், கைத்தறித் துறை அமைச்சர், ஓ.எஸ்.மணியன்,முன்னாள் அமைச்சர், ஜெயபால் அணியினர், ஒரு பக்கம் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர். 

மதுரையில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரும், கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜுவும் எதிர் எதிர் அணியாகவும். துாத்துக்குடி மாவட்டத்தில், செய்தித் துறை அமைச்சர், ராஜு, முன்னாள் அமைச்சர், செல்லப்பாண்டியன், ஓரணியாகவும், முன்னாள் அமைச்சர், சண்முகநாதனும், அவரதுஆதரவாளர்களும், இன்னோரு அணியாகவும் இணைந்திருக்கின்றனர்.

இப்படி ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக்கொள்ளும் அதிமுக எம்.எல்.ஏக்களில் சிலர் ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும், சிலர் இபிஎஸ்க்கு ஆதரவாகவும் இருக்கின்றனர். இதனால் இவர்களின் சண்டைக்கு விலக்கு தீர்க்க முடியாமல் திணறி வருகின்றனர் இபிஎஸ்-ம் ஓபிஎஸ்-ம். இதனிடையே தங்களுக்கு தான் கட்சியில் முக்கியத்துவம் வேண்டும் என்ற வகையிலும் இவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வேறு அவ்வப்போது வருவதால் என்ன செய்வது என தெரியாமல் முழி பிதுங்கிப்போய் இருக்கின்றனர் இபிஎஸ்-ம் ஓபிஎஸ்-ம். ஏற்கனவே இந்த ஆட்சியை கலைக்க நாலா பக்கமும் இருந்து முயற்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் உட்கட்சி பூசல் வேறு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதே நிலை நீடித்தால் கட்சியின் நிலை என்னாவது என கலங்கி போயிருக்கும் எடப்பாடி, கடந்த 19ம் தேதி அன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒன்றை சென்னையில் வைத்து நடத்தினார். அந்த கூட்டத்தின் போது தான் கே.பி.முனுசாமியும் , அமைச்சர் வேலுமணியும் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டனர். கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே வேலுமணி எழுந்து சென்று  முதல்வர் காதில்  ஏதோ ரகசியமாக சொல்லி இருக்கிறார். 

இதனால் அவர் அருகில்  அமர்ந்திருந்த, துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி.முனுசாமிக்கு கோபம் வந்திருக்கிறது. ’பொது மேடையில் முதல்வரிடம் சென்று, தனியாக கிசுகிசுப்பது, சபை நாகரிகமல்ல' என, வேலுமணியிடம் தன் கோபத்தை முனுசாமி காட்ட, 'அவர், மாநிலத்தின் முதல்வர்; அவரிடம் ரகசியமாக பேச வேண்டிய, அரசாங்க விஷயங்கள் உள்ளன' என காட்டமாக பதிலளித்திருக்கிறார் வேலுமணி இதையெல்லாம், தலைமை செயலகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், இது கட்சி அலுவலகம் என பதிலுக்கு முனுசாமி நோஸ்கட் கொடுக்கவும் பதிலுக்கு எகிறி இருக்கிறார் வேலுமணி. 

மொத்தத்தில் சபை நாகரிகம் பற்றி மேடையிலேயே விளக்கம் கொடுத்து சண்டை இட்டிருக்கின்றனர் இந்த இருவரும். இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து போயிருக்கிறார் எடப்பாடியார். இதுவே ஜெயலலிதா இருந்திருந்தால் கண் அசைவுக்கு கட்டுப்பட்டிருக்கும் ஒட்டு மொத்த கூட்டமுமே. ஆனால் இப்போதோ நிலையே வேறு. இப்படி ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ள தயாராக இருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர்களுக்கும் எத்தனை நாள் தான் ரெஃப்ரீயாக இருந்து சமாளிக்க போகிறாரோ எடப்பாடியார் என நொந்து போயிருக்கின்றனர் அதிமுகவினர்.
 

click me!