பிப்- 10 ஆம் தேதி தேர்தல்.. உ. பிக்கு 7 கட்ட வாக்குப் பதிவு.. மார்ச் 10 வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் ஆணையம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 8, 2022, 4:38 PM IST
Highlights

தொடர்ந்து பேசிய அவர், ஐந்து மாநிலங்களிலும் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் எனவும், உத்திர பிரதேசத்தில் 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்,  அதாவது  பிப்ரவரி 10,  பிப் 14, பிப் 20, பிப் 23, பிப் 24 , மார்ச் 3, மார்ச் 7 என ஏழு கட்டமாக தேர்தல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரபிரதேசம், பஞ்சாப்,  மணிப்பூர், உத்ரகாண்ட், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும், உத்தரகாண்ட் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில்  டெல்லியில் உள்ள விக்யான் பவனில் தலைமை தேர்தல் அதிகாரி  சுசில் சந்திரா செய்தியாளரை சந்தித்தார் அப்போது பேசிய அவர் 5 மாநிலங்களில் 18.34 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக கூறினார். 

கொரோனா, ஒமைக்ரான் பரவிவரும் நிலையில் தேர்தல் நடத்துவது மிகவும் சவாலான காரியம் எனவும் கொரோனா அதிகரிக்காத வகையில் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் முதல் முன்னுரிமை என்றார், 5 மாநிலங்களில் முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 24.9 லட்சமாக உள்ளது. என்றும்  கொரோனா காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் சுஷீல் சந்திரா கூறினார். எனவே ஒரு வாக்குச் சாவடியில் 1250 முதல் 1500 பேர் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்குச்சாவடியில் எண்ணிக்கை 2.16 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். 80 வயது முதியோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம், கொரோனா தொற்று பரவல் காரணமாக வேட்பாளர்கள் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வரவேண்டும் என்று வலியுறுத்திய அவர், முதல்முறை வாக்களிக்கும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 11.4 லட்சம் என அறிவித்தார். 

இதுவரை பஞ்சாபில் 82 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 56% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி 52 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இ-விஜில் என்ற செயலியில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம், கொரோனா தொற்று பரவும் காரணத்தினால் அரசியல் கட்சிகள் முடிந்தவரை டிஜிட்டல் முறையில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ளலாம், தேர்தல் பணியாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருத்தில் கொள்ளப்பட்டு கூடுதல் தடுப்புசி செலுத்த பரிந்துரைக்கப்படும் என்றும்  5 மாநில தேர்தலில் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், ஐந்து மாநிலங்களிலும் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் எனவும், உத்திர பிரதேசத்தில் 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்,  அதாவது  பிப்ரவரி 10,  பிப் 14, பிப் 20, பிப் 23, பிப் 24 , மார்ச் 3, மார்ச் 7 என ஏழு கட்டமாக தேர்தல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களான  பஞ்சாப், உத்தரகாண்ட், கோவாவில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் பிப்27, மார்ச்3 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 14ம் தேதியும் வேட்புமனு தாக்கல் கடைசி நாள் 21 ஆம் தேதியும், வேட்புமனு தாக்கல் பரிசீலனை ஜனவரி 24ஆம் தேதியும், வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் 27 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது . வாக்கு எண்ணிக்கை  மார்ச். 10 ஆம்  தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!