நீங்க சோறுதானே சாப்பிடுகிறீர்கள் மிஸ்டர் சம்பத்… டுவிட்டரில் வெளுத்து வாங்கிய பாத்திமா பாபு…

Asianet News Tamil  
Published : Mar 08, 2017, 08:55 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
நீங்க சோறுதானே சாப்பிடுகிறீர்கள் மிஸ்டர் சம்பத்… டுவிட்டரில் வெளுத்து வாங்கிய பாத்திமா பாபு…

சுருக்கம்

Fathima babu twitt

நீங்க சோறுதானே சாப்பிடுகிறீர்கள் மிஸ்டர் சம்பத்… டுவிட்டரில் வெளுத்து வாங்கிய பாத்திமா பாபு…ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அதன் வாசலில் தவமாய் கிடந்தவர் அதிமுக வின் நட்சத்திர பேச்சாளர் பாத்திமா பாபு. ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளராக இருந்த இவர் முதலில் சசிகலா ஆதரவாளராகவே இருந்து வந்தார்.

ஆனால் ஜெயா தொலைக்காட்சியில் சசிகலாவை சின்னம்மா என்று வாசிக்க சொன்னது தனக்கு பிடிக்கவில்லை என்றும் ஜெயலலிதாவை அம்மா என்று சொன்ன வாயால் சசிகலாவை சின்னம்மா என்று தன்னால் அழைக்க முடியவில்லை என கூறி ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.

இந்நிலையில் அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில், ஓ.பி.எஸ் அணிக்கு சென்ற பாத்திமா பாபு மற்றும் நடிகை லதா ஆகியோர் பற்றி இழிவான ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். 

அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஓபிஎஸ் சதித் திட்டம் தீட்டுகிறார் என்றும் அவர் ஆடும் தப்பாட்டத்துக்கு பாத்திமா பாபு , லதா போன்ற பத்தினி தெய்வங்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்து விட்டது சர்ச்சைக்குரிய விதத்தில் பதிவிட்டிருந்தார். இது பொது மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
 

நாஞ்சில் சம்பத்தின் கருத்துக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாத்திமா பாபு “சம்பத் அவர்களே...உங்கள் வாந்தியை பொதுவெளியில் எடுத்துள்ளீர்கள்...நேரமிருந்தால் பின்னூட்டங்களைப் படித்து பாருங்கள். உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா? நீங்கள் சோறுதான் சாப்பிடுகிறார்களா? என கேள்வி எழுப்பி வெளுத்து வாங்கியுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?