பிதாவே (அம்பேத்கரே ) இவர்களை மன்னியும்.. செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.. வாட்டி எடுக்கும் வன்னி அரசு

By Ezhilarasan BabuFirst Published May 4, 2022, 5:57 PM IST
Highlights

தன் வாழ்நாளில் ஒருமுறை கூட புரட்சியாளர் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தாதவர்கள், பிழைப்பு வாதத்திற்காக ஆம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுகிறார்கள் என இளையராஜா மற்றும் கங்கை அமரனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு விமர்சித்துள்ளார். 

தன் வாழ்நாளில் ஒருமுறை கூட புரட்சியாளர் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தாதவர்கள், பிழைப்பு வாதத்திற்காக ஆம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுகிறார்கள் என இளையராஜா மற்றும் கங்கை அமரனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு விமர்சித்துள்ளார். மேலும் பிதாவே, அம்பேத்கரே இவர்களை மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என அவர் பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டி அவர்களை  விமர்சித்து உள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவை தமிழக மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசைஞானி என தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் காலை சொத்து என்றும் அவரை புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.  பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அது சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டிருப்பதுதான். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அண்ணல் அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இசையமைப்பாளர் இளையராஜா அதில் அண்ணல் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டுள்ளார். அம்பேத்கர் கண்ட கனவுகளை  செயல்படுத்தி வருபவர் மோடிதான் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இது  தலித்திய வாதிகள் மற்றும்  அம்பேத்கர்-பெரியாரிஸ்டுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட இயக்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இளையராஜாவின் இந்த கருத்தை கடுமையாக  விமர்சித்து வருகின்றனர். அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டது இளையராஜாவின் சுயநலத்தின் உச்சம் என்றும் மலைக்கும்- மடுவுக்குமான ஒப்பீடு இது என்றும்,  வைரக் கல்லும்- உப்புக்கல்லும் ஒன்றா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இளையராஜாவுக்கு அதிக கருப்புப் பணம் வைத்துள்ளதால் அதற்கு வரி கட்டுவதில் இருந்து தப்பிப்பதற்காக அவர் மோடிக்கு ஆதரவாக இப்படி ஜால்ரா போடுகிறார் என்றும், அவரை கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சுப்பராயன் கடுமையாக  விவரித்துள்ளார். இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், அதன் நெறியாளரை ஏய் நிறுத்துடா.. வாடா போடா  என கடுமையாக ஒருமையில் பேசினார்.

இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி வருகிறது. மேலும் அம்பேத்கருடன் மோடியை  ஒப்பிடுவதற்கு இத்தனை பேர் கேள்வி கேட்கிறீர்களே, அம்பேத்கருடன் திருமாவளவனை  ஒப்பிட்டது சரியா, அம்பேத்கருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை ஒப்பிடுவது சரியா? என காட்டமாக அவர் கேள்வி எழுப்பினார். அத்துடன் அம்பேத்கரை யாருடனும் ஒப்பிடுவதற்கு எனக்கு உரிமை உள்ளது, அது என்னுடைய இஷ்டம் என அவர் ஆவேசமாக கூறினார். இந்நிலையில் இதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதை மேற்கோள் காட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு வாழ்நாளில் ஒருமுறைகூட புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தாதவர்கள், தற்போது பிழைப்பு வாதத்திற்காக அம்பேத்கர் குறித்தும் சனாதனி மோடியோடு ஒப்பிடுகிறார்கள். பிதாவே (அம்பேத்கரே) இவர்களை மன்னியும்.  தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என பைபிள் வசனம் லூக்கா 23 34 என அவர் பதிவிட்டுள்ளார். 

 

click me!