தந்தை கொண்டுவந்த சட்டத்தில் சிக்கிய மகன்: பொதுப்பாதுகாப்புச் சட்டத்தில் முதன்முதலாக கைதான முன்னாள் முதல்வர்

By Selvanayagam PFirst Published Sep 16, 2019, 8:44 PM IST
Highlights

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாநில நிர்வாகம் கைதுசெய்து வீ்ட்டுக் காவலில் வைத்துள்ளது
பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்து விசாரணையின்றி அதிகபட்சம் 2 ஆண்டுகளை சிறையில் வைத்திருக்க முடியும்.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த மாதம் 5-ம்தேதி நீக்கியது, அரசியலமைப்பு சட்டத்தில் 370 பிரிவையும் திரும்பப்பெற்றது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காக்கும் பொருட்டு ஏராளமான கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. அதோடு மட்டுமல்லாமல் முன்னாள் முதல்வர்கள் மெகமூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோரை வீ்ட்டுக் காவலில் வைத்தது. மேலும் மநிலத்தில் ஏராளமான அரசியல் தலைவர்களும் வீ்ட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் மதிமுக சார்பில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் விழாவில் எனது நண்பர் பரூக் அப்துல்லாவை அழைக்க வேண்டும் ஆனால் அவர் சட்டவிரோதமாக வீ்ட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார், அவரை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த வேண்டும் எனக் கோரி ஹேபியஸ் கார்பஸ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பார் என்பதால் அடுத்த 3 மாதங்களுக்கு இவர் வீட்டுக்காவலில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

காஷ்மீரின் பொதுப்பாதுகாப்புச் சட்டத்தில் அந்த மாநிலத்தின் முக்கிய அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுதான் முதல்முறையாகும். பொதுவாக இந்த சட்டம் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், கல்எறியும் மக்களைத்தான் கைது செய்துள்ளது. முதல்முறையாக அரசியல்தலைவரை கைது செய்துள்ளது.

இந்தச் சட்டம் பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லாவால் ஜம்மு காஷ்மீரில் கொண்டுவரப்பட்டது. மிகக்கொடூரமான இந்தச சட்டத்தில் ஒருவரைக் கைதுசெய்தால், விசாரணையின்றி 2 ஆண்டுகள் வைத்திருக்க முடியும். தந்தை கொண்டு வந்த சட்டத்தில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே வைகோ தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் 30-ம் தேதி பரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது

click me!