சிதம்பரத்தைப் பார்த்தீங்களா ? அவரு நிலைமைதான் உங்களுக்கும் !! மம்தாவை மிரட்டிய பாஜக எம்எல்ஏ !!

Published : Sep 16, 2019, 08:26 PM IST
சிதம்பரத்தைப் பார்த்தீங்களா ? அவரு நிலைமைதான் உங்களுக்கும் !! மம்தாவை மிரட்டிய பாஜக எம்எல்ஏ !!

சுருக்கம்

மேற்கு வங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி தனது தவறுகளை திருத்திக்கொள்ளவில்லை எனில் ப.சிதம்பரத்தின் நிலைமை தாம் மம்தாவுக்கும் வரும் என்று பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் , மேற்கு வங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். 

மேலும் அவர் பேசும் தன்மையை மாற்ற வேண்டும். இல்லையென்றால் அவரது வாழ்க்கையும் ப.சிதம்பரத்தைப் போலவே முடிவடையும். ப.சிதம்பரம் எதிர்கொண்டதை அவரும் சந்திக்க வேண்டியிருக்கும். தன்னை நோக்கி மோசமான நாட்கள் வருகிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். 

வங்கதேசத்துக்கு மக்களுக்காக பேசும் அவர் வங்கதேச பிரதமராக ஆவதற்கு வேண்டுமானால் அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று முயற்சிக்கலாம். ஏனெனில், மேற்குவங்கத்தில் ராமர் மற்றும் அனுமராக, அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் விளையாடுவதற்கு களமிறங்கியுள்ளனர்' என்று பேசியுள்ளார். 

முன்னதாக, முஸ்லீம் ஆண்கள், பல மனைவிகளை வைத்துக்கொண்டு விலங்கினம் போன்ற போக்கை கையாள்கின்றனர்; பத்திரிகையாளர்கள் அனைவரும் 'புரோக்கர்கள்', மருத்துவர்கள் அனைவரும் 'பேய்கள்', 'வந்தே மாதரம்' என்று கோஷமிடாதவர்கள் வாழ்வதற்கே தகுதியானவர்கள் அல்ல என்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியவர் சுரேந்திர சிங் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!