அமெரிக்காவில் அசத்திய அம்மாவின் மாணவனே... எடப்பாடியை போற்றும் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்..!

By Vishnu PriyaFirst Published Sep 16, 2019, 7:19 PM IST
Highlights

தமிழக முதல்வரே! முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய்? மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய். அயல்நாட்டுக்கே சென்றாலும், கன்றுக்கு உணவூட்டி, விவசாயி நானென்றாய். ஆங்கில நாட்டிற்கே சென்றாலும், தமிழில் உரை நிகழ்த்திய அம்மாவின் மாணவனே:    ஜெ.,வின்  உதவியாளராயிருந்த பூங்குன்றன்.

* தமிழக முதல்வரே! முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய்? மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய். அயல்நாட்டுக்கே சென்றாலும், கன்றுக்கு உணவூட்டி, விவசாயி நானென்றாய். ஆங்கில நாட்டிற்கே சென்றாலும், தமிழில் உரை நிகழ்த்திய அம்மாவின் மாணவனே:    ஜெ.,வின்  உதவியாளராயிருந்த பூங்குன்றன்.(முதலீடுகளை மட்டுமா ஈர்த்தார்? சசி, தினகரன் சைடில் இருந்த உங்களையும் தான் ஈர்த்தார். அதென்ன தமிழில் உரை நிகழ்த்திய அம்மாவின் மாணவன்? அம்மா அஞ்சாறு மொழிகளில் பின்னிப் பெடலெடுப்பாங்கன்னு உங்களுக்கு தெரியாதா பூங்குன்றன்? வாட் இஸ் திஸ்!)

* தமிழக அமைச்சரவையில் கூடிய விரைவில் மாற்றம். முதல்வர் சாட்டையை எடுக்கிறார். மூன்று நான்கு அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிதாய் நான்கைந்து பேர் நியமிக்கப்படலாம்: செய்தி. (க்கும், கூடிய சீக்கிரம் தமிழகத்தில் ஆட்சியே மாற்றப்படுமுண்ணு தகவல் ஓடிட்டு இருக்குது. பா.ஜ. போற போக்கப் பார்த்தால், கவர்னர் ஆட்சி உறுதி போல. இதுல முதல்வர் சாட்டை எடுக்கிறார், கேட்டை திறக்கிறார்ன்னு ஏன் பாஸு அவரை புண்ணாக்குறீங்க?)

* என்னை உதயநிதியோடு கம்பேர் பண்ணாதீங்க. அவருக்கு கல்யாணமாகி குழந்தையெல்லாம் பொறந்துடுச்சு. ஆனா நான் சின்னப்பையன்:    விஜயபிரபாகரன். 
(ஆஹா, முடியலையே கண்ணு. ஏன் ஒப்பிட்டு பார்க்க கூடாதுன்னு உலகமகா அரசியல் பாயிண்டு ஒன்றை சொல்லுவீங்கன்னு பார்த்தால், வாடி வதங்கி வத்தலாய்ப் போன ஒரு காரணத்தை, மொக்கைத் தனமா சொல்லிட்டீங்களே தம்பி. இதுக்கா கேப்டன் உங்களை கூராக்கி, சீராக்குனார்?)

* விஜயகாந்த் அளவுக்கு தன் சம்பளத்தில் மக்களுக்கு அள்ளிக் கொடுத்த நடிகர் கிடையவே கிடையாது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கூட அவ்வளவு பணம் அள்ளித் தந்ததில்லை. ஆனால், புரட்சிக் கலைஞர் தனது ஒவ்வொரு பட சம்பாத்தியத்திலும் 30% தொகையை  ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்தார்:    ராஜேந்திர பிரசாத். (ஏம்பா ராசேந்திரா, சீண்டுவார் இல்லாம கிடந்தோம்.  வெற்றி, பதவின்னு எதுவும் கிடைக்கலேன்னாலும் ஏதோ இப்பதான் இத்யாதிகளுக்கு பஞ்சமில்லாமல் கட்சி ஓடிட்டு இருக்குது. அதுக்கும் வைக்கிற பாரு ஆப்பு!....ன்னு கழக மேலிடத்தின் மனசு அல்லாடி தில்லாடுமே இதைக்கேட்டு.)

* தமிழிசையை கவர்னராய் நியமித்ததை வம்புக்கிழுத்து தெலுங்கானா மாநில அரசு அதிகாரி கட்டுரை எழுதிய விவகாரத்தில், கவர்னர் தமிழிசையிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்:    பா.ஜ. (அண்ணே தயவு செஞ்சு மன்னிப்பை கேட்டுடுங்க. இல்லேன்னா அந்தம்மா உங்க கட்சி, தேர்தல்ல வென்று ஆட்சி அமைச்சதை பத்தி வெற்றிகரமான தோல்வி! ஆளுங்கட்சியான எதிர்க்கட்சி! முதல்வரான எதிர்க்கட்சி தலைவர்! தெலுங்கானாவான ஆந்திரா!ன்னு சொல்லி டயலாக் பேச ஆரம்பிச்சா நாக்கு, மூக்குல நுரை தள்ளிடும் ஜாக்கிரதை.)

click me!