தடுப்புகளை உடைத்து, வாள் ஏந்தி வெள்ளைக் குதிரைகளில் பாய்ந்த விவசாயிகள்.. கலவரத்தில் முடிந்த போராட்டம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 26, 2021, 3:40 PM IST
Highlights

ட்ராக்டர்களுடன் உள்ளே செல்ல முடியாது என்பதால்,  ஏற்கனவே  கையில் வாள் ஏந்தி போர் வீரர்களை போல  உடை அணிந்து வெள்ளை குதிரைகளில் அமர்ந்து இருந்த விவசாயிகள் தடுப்புகள் விளக்கப்பட்ட உடன் விர்ரென மத்திய டெல்லியை நோக்கி சீறிப் பாய்ந்தனர் 

தடுப்புகளை உடைத்து, காவல்துறையினரை தாக்கி, போலீஸ் வாகனங்களைச் சூறையாடி மத்திய தில்லியிலுள்ள ஐடிஓ பகுதியை நோக்கி வெள்ளைக் குதிரைகளில்  விவசாயிகள் சீறிப்பாய்ந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவும் கலவரத்துக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. காவல்துறை  விதித்த நிபந்தனைகள்படி விவசாயிகள் நடந்து கொள்ளாதது நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அறவழயில் போராடி வந்த விவசாயிக்கள் குடியரது தினமான இன்று வன்முறையில் ஈடுபட்டிருப்பது, விவசாயிகள் விவேகத்தை இழந்து விட்டார்களா என எண்ணவைத்துள்ளது.  

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு சிங்கு எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான இன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் என ஏற்கனவே விவசாயிகள் அறிவித்திருந்தனர். அவர்களது போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியதுடன் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும் 12 மணிக்கு மேல் டிராக்டர் அணிவகுப்பை நடத்தி கொள்ளுமாறு விவசாயிகளுக்கு நிபர்ந்தனை விதித்திருந்தனர். 

ஆனால் இன்று காலையே டெல்லி எல்லைகளில் பதற்றம் நிலவியது.  நாட்டின் தலைநகரின் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர்  எல்லைப் பகுதிகளில் முகாமிட்டிருந்த விவசாயிகள் திடீரென அத்துமீறிய தடைகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். அவளுக்கு ஒதுக்கிய நேரத்திற்கு முன்னரே விவசாயிகள் பேரணி செல்ல முயன்றதால் குழப்பம் ஏற்பட்டது.  அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் விவசாயிகள் கட்டுக்கடங்கவில்லை. இதனால் போலீசார்  தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர். ட்ராக்டர்களுடன் உள்ளே செல்ல முடியாது என்பதால்,  ஏற்கனவே  கையில் வாள் ஏந்தி போர் வீரர்களை போல  உடை அணிந்து வெள்ளை குதிரைகளில் அமர்ந்து இருந்த விவசாயிகள் தடுப்புகள் விளக்கப்பட்ட உடன் விர்ரென மத்திய டெல்லியை நோக்கி சீறிப் பாய்ந்தனர் 
அவர்கள் மத்திய டெல்லிக்குள் நுழைய ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் விவசாயிகள் திட்டமிட்டு அப்பகுதிக்குச்  நுழைந்தது, பதற்றத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தது. இதுவும் கலவரத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

இந்நிலையில் இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மத்திய டெல்லி ஐடிஒ பகுதியில் விவசாயிகள் நுழைந்தபோது அங்கு போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது விவசாயிகள் டிராக்டர்களுடன் போலீசார் மீது மோத முயற்சித்தனர் அப்போது அங்கிருந்து பின்வாங்கிய போலீசார், அருகிலுள்ள கட்டிடங்களுக்குள் ஓடி அங்கிருந்து விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட நிஹாங்காக்கள் தங்களை வாளால் தாக்க முற்பட்டதாகவும்,  விவசாயிகள் காவல் துறையினர் மீது கற்களை வீசி வாகனங்களை சூறையாடியதாகவும் போலீஸார் விவசாயிகள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இதில் விவசாயிகள் மற்றும் காவல்துறையினர் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 
 

click me!