இருடியம் மோசடியில் ஈடுபட்ட பிரபல இசையமைப்பாளர்.. கொத்தாக தூக்கிய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Mar 17, 2021, 2:59 PM IST
Highlights

சென்னை போயஸ்கார்டனில் குடும்பத்துடன் வசிக்கிறார், இந்நிலையில் நேற்று இவர் சினிமா இசையமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.  

பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின்  மகனும் சினிமா இசையமைப்பாளருமான அம்ரிஷ் ரூபாய் 26 கோடி மோசடி வழக்கில்  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன்  அம்ரிஷ் (வயது 33) இவர் சினிமா இசையமைப்பாளரும் ஆவார். டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா, பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின்-2 உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மற்றொரு தமிழ் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். 

சென்னை போயஸ்கார்டனில் குடும்பத்துடன் வசிக்கிறார், இந்நிலையில் நேற்று இவர் சினிமா இசையமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.  பின்னர் அவர் இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்த அவரது தாய் ஜெயசித்ரா அம்ரிஷை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் ஆனால் அதில் ஏதும் பலன்  இல்லை.  இந்நிலையில் அம்ரிஷ் கைது செய்யப்பட்டது குறித்து சென்னை மாநகர போலீசார் பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளனர். 

அதில், சென்னை வளசரவாக்கம்  ஜானகி நகர் நெடுமாறன் தெருவில் வசிக்கும் வெங்கடாசலம்  (68) என்பவர் கொடுத்த தாகவும் அதில்,  கடந்த 2013ம் ஆண்டு அறிமுகமான அம்ரிஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் வெங்கடாசலத்திடம் அரியவகை இருடியம் பொருள் இருப்பதாகவும் அதன் மதிப்பு பல கோடிகள் என்றும், அதனை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்தால் அதிக லாபத்திற்கு விற்கலாம் என்று ஆசைவார்த்தை கூறியதை நம்பி  26.20 கோடி வரை கொடுத்ததாகவும், பணத்தைப் பெற்றுக் கொண்டு போலியான இருடியம் பொருளை கொடுத்து தன்னை 26. 20 கோடி மாற்றியதாகவும், எனவே அம்ரீஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வெங்கடாசலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். எனவே இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் அம்ரிஷ் இப்புத்தகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது எனவும் எனவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அம்ரிஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.  

 

click me!