திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேட்பாளர்களின் பெயரை மாற்றி மாற்றி சொல்லி, உளரிக்கொட்டிய ஸ்டாலின்

By Asianet TamilFirst Published Mar 17, 2021, 2:43 PM IST
Highlights

திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேட்பாளர்களின் பெயரை மாற்றி மாற்றி சொல்லி, உளரிக்கொட்டினார் ஸ்டாலின்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி மற்றும் ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார் கெஜல்நாயக்கன்பட்டி யில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர் வேட்பாளர்கள் இருந்த மேடையில் ஏறாமல் தனியாக பிரச்சார வேனில் இருந்தபடியே பிரச்சாரம் மேற்கொண்டார் சுமார் ஒரு மணி நேரம் அங்கே இருந்த திமுக தொண்டர்களிடையே உரையாற்றிய அவர் பிரசாரத்தை நிறைவு செய்யும்போது முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புகழ் பேசினார்.

தேர்தலில் வீரபாண்டி ஆறுமுகம் மகன் வீரபாண்டி ராஜா,பிரபு ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலில் வீரபாண்டியாரின் நேரடி வாரிசு தர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை இதனால் வீரபாண்டி ஆதரவாளர்கள் விரத்தியில் இருந்தனர் ஆனால் தற்போது வீரபாண்டியார் குடும்பத்திற்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாக பேசினார் ஆனால் அந்த வேட்பாளர் பெயரையே ஸ்டாலின் மறந்துவிட்டார். 

வேட்பாளர்களின் பெயர் என்ன என்று அருகில் இருந்த இடம் கேட்டார் கேட்ட பின்னரும் அவரது பெயரை மாற்றி மாற்றி கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் தருண் என்பதற்கு பதிலாக வருண் என்று கூறியதையும் திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்காடு தொகுதி திமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு தமிழ்அரசன் என்று கூறி வாக்கு சேகரித்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தலைவரின் தவறை சுட்டிக் காட்ட முடியாமல் அங்கிருந்து நிர்வாகிகளும் வேட்பாளர்களும் தவித்துப் போயினர்.

இதனிடையே ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை முடித்துக் கிளம்பிய நிலையில் அங்கு வீரபாண்டி தொகுதி சீட் வழங்கப்பட்ட மருத்துவர் தருணை திமுக தொண்டர்கள் சூழ்ந்து கொண்ட  செல்பி எடுக்க முண்டி அடித்துக் கொண்டனர்.

சுமார் அரை மணி நேரமாக வேட்பாளரை தொண்டர்கள் கசக்கிப் பிழிந்தனர் வேறு வழி தெரியாமல் வேட்பாளர் பல மணி நேரமாக சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்தார் ஒரு கட்டத்தில் கடுப்பான வேட்பாளர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது மீண்டும் தொண்டர்களை அவரை சூழ்ந்து கொண்டு செல்லவிடாமல் மாறி மாறி செல்பி எடுத்துக்கொண்டனர் ஒரு கட்டத்தில் தப்பித்து வெளியே வந்தபோது வேட்பாளரின் கார் வராததால் மீண்டும் ஒரு கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது .  பின்னர் கார் வந்த நிலையில் தொண்டர்களும் கேரமராவிற்கு பெரிய வணக்கத்தை சொல்லி அங்கிருந்து கிளம்பினார் .

திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது, இப்படி பல்வேறு காமெடிகள் நடந்து வருகின்றன.

click me!