‘சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும்’... தெறிக்கவிடும் மதிமுக தேர்தல் அறிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 17, 2021, 1:28 PM IST
Highlights

திமுக, காங்கிரஸ் கட்சிகளைத் தொடர்ந்து மதிமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். 
 

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சாத்தூர் - டாக்டர் ரகுராம்,வாசுதேவநல்லூர் ( தனி) - சதன் திருமலைக்குமார், மதுரை தெற்கு - புதூர் பூமிநாதன், பல்லடம் - மோகன்குமார் அல்லது ஈஸ்வரன்,  அரியலூர் - சின்னப்பா, மதுராந்தகம்(தனி) - மல்லை சத்யா ஆகியோர் போட்டியிட உள்ளனர். திமுக, காங்கிரஸ் கட்சிகளைத் தொடர்ந்து மதிமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். 

மதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ... 

தமிழை மத்தியிலும் ஆட்சி மொழியாகவும் , நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கவும் பாடுபடுவோம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திருப்ப பெற குரல் கொடுப்போம்

சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவோம்

மதுவிலக்கை வலியுறுத்துவோம்.

வேளாண் திருத்த சட்டங்களை சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.

அயலக தமிழர் பாதுகாப்பிற்காக அயலக தமிழர் ஆணையம் அமைக்க குரல் கொடுபோம்

ஏழு தமிழர் விடுதலைக்கு குரல் கொடுப்போம்

உச்ச நீதிமன்றத்தின் கிளையை தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைத்திடவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை கோவையில் அமைத்திடவும் குரல் கொடுப்போம்
 

click me!