குடும்ப கட்சிகள் ஜனநாயகத்து மிகப்பெரிய ஆபத்து.! பாஜகவை எதிர்கொள்ள முடியாமல் கொலை செய்கிறார்கள்..! பிரதமர் மோடி

By Thiraviaraj RMFirst Published Nov 12, 2020, 8:28 AM IST
Highlights

மோதி வெல்ல துணிச்சல் இல்லாதவர்கள், எங்களின் தொண்டர்களை கொலை செய்கிறார்கள் என்று பீகார் தேர்தல் வெற்றிக்குப்பின் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

குடும்பத்தால் நடத்தப்படும் கட்சி இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். பாஜகவுடன் ஜனநாயகரீதியாக மோதி வெல்ல துணிச்சல் இல்லாதவர்கள், எங்களின் தொண்டர்களை கொலை செய்கிறார்கள் என்று பீகார் தேர்தல் வெற்றிக்குப்பின் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீகாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியைச்சேர்ந்த தேசிய ஜனநாயகக்கூட்டணி மீண்டும்ஆட்சியைப் பிடித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களிலும் பாஜக அமோகமான வஇந்த தேர்தல் வெற்றி தொடர்பாக டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி  உரையாற்றினார். அதில்..

பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் நமக்கு கிடைத்த வெற்றிக்கான காரணம், ஒவ்வொருவரின் ஆதரவு, ஒவ்வொருவருக்கான வளர்ச்சி, ஒவ்வொருவருக்கான நம்பிக்கை எனும் தாரக மந்திரம்தான்.
பீகார் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்பது வளர்ச்சியை நோக்கி யார் நேர்மையாக உழைக்கிறார்களோ.! அவர்களுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது.

21-வது நூற்றாண்டில் தேசிய அரசியல் என்பது வளர்ச்சியை அடிப்படையாக் கொண்டது மட்டும்தான் என்று மக்கள் முடிவுசெய்துவிட்டார்கள்.பாஜகவுடன் ஜனநாயகரீதியாக நேரடியாக மோத முடியாதவர்கள் நமது தொண்டர்களை கொலை செய்கிறார்கள். சில இடங்களில் பாஜக தொண்டர்களை கொலை செய்து அவர்களின் இலக்கை உணர முடியும் என நினைக்கிறார்கள். இந்த கொலையைச் செய்பவர்களுக்கு நான் எச்சரிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.

தேர்தல் வரும் போகும், வெற்றி தோல்விகள் இருக்கும். ஆனால், ஜனநாயகத்தில் அரசியல் கொலைகள் செய்யும் செயல் ஒருபோதும் வெற்றிபெறாது.குடும்பத்தால் ஆளப்படும் கட்சி இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். ஒரு தேசியக் கட்சியே ஒரு குடும்பத்துக்கு இரையாகிவிட்டது.இந்தத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு அளித்த ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. அதேபோல, தேர்தலை சிறப்பாக நடத்திய தேர்தல் ஆணையம், பாதுகாப்புப் படையினர், மாநில நிர்வாகம் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்

click me!