நடந்து முடிந்த பீகார் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பெரும்பாலானவர்கள் கிரிமினல் வழக்கு உள்ளவர்களே..!

By T BalamurukanFirst Published Nov 12, 2020, 7:42 AM IST
Highlights

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 68 சதவீதம் பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பீகார் அரசியிலில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
 

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 68 சதவீதம் பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பீகார் அரசியிலில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசியல் கண்காணிப்பு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் கருத்துப்படி, 2020 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் பகுப்பாய்வு (242) செய்யப்பட்டவர்களில் 163 பேர் தங்களது மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக அவர்களே அறிவித்துள்ளனர். அதாவது வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 68 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளது.

 123 பேர் மீது அதாவது 51 சதவீதம் பேர் மீது கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. கிரிமினல் குற்றச்சாட்டு உள்ள வெற்றி பெற்ற வேட்பாளர்களில் பெரும்பாலானோர் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவர்கள். ராஷ்டிரிய ஜனதா தள கட்சி சார்பில் 74 பேர் வெற்றி பெற்றிருந்தாலும் அதில் 60 சதவீதம் பேர்அதாவது 44 பேர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது.

அடுத்து பா.ஜ.க.வின் சார்பில் வெற்றி பெற்ற 73 வேட்பாளர்களில் 35 பேர்  மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் 43 வெற்றி வேட்பாளர்களில் 11 பேர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. காங்கிரஸின் 19 வெற்றி வேட்பாளர்களில் 58 சதவீதம் 11 பேர் பேர், சி.பி.ஐ.எம்.எல். 12 வேட்பாளர்கள் 8 பேர், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சார்பாக வெற்றி பெற்ற 5 வேட்பாளர்கள் பேர் நூறு சதவீதம்  கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாம்..

click me!