குடும்பத்தில் குஸ்தி! பேபிம்மா கூட மாதுகுட்டி இணைந்திருப்பதில் ஆயில் ராஜாவுக்கு விருப்பல!

 
Published : Feb 15, 2018, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
குடும்பத்தில் குஸ்தி! பேபிம்மா கூட மாதுகுட்டி இணைந்திருப்பதில் ஆயில் ராஜாவுக்கு விருப்பல!

சுருக்கம்

Family in the family! Ayal Raja does not want to be a pedigree too

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டுக்குள் வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் நுழைந்தார். ரெய்டும் நடத்தினார். எதுவும் சிக்கவில்லை, காரணம் அவருக்கு எதையும் எடுக்க தெரியவில்லை, அவர் உண்மையான அதிகாரியாக இருந்தால் தானே அவருக்கு எடுக்கத் தெரியும் ஆனால் அவர்தான் டுபாக்கூர் ஆச்சே...

காவல் துறையும், மீடியாவும் வந்ததும் சுவர் ஏறிக் குதித்து தலை தெறிக்க ஓடி விட்டார். வந்தது யார்? அவரை பிடிக்க தனப்படை அமைத்து தேடியது போலீஸ். இந்த கேப்பில் அந்த டுபாக்கூரே வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தது.

இங்கதான் டிவிஸ்ட்டே இருக்கு, சரணடைந்தது கொடுத்த வாக்குமூலத்தில், ‘தீபா மறைத்து வைத்திருக்கும் பணத்தையும், நகையையும் கொள்ளையடிப்பதற்காக தீபாவின் கணவர் மாதவன் போட்டுக் கொடுத்த திட்டத்தின்படிதான் நான் போலி அதிகாரியாக நடித்தேன்’ என சொல்லி இருக்கிறார். ஆனால் இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்ட அந்த டுபாக்கூர் மறுநாளே மாதவன் தன்னை அனுப்பவில்லை என சொல்லியிருக்கிறார். அப்படியானால் போலி அதிகாரியை அனுப்பியது யார் என காவல்துறை ஒரு பிடி பிடித்திருக்கிறது.

’ஆரம்பத்தில் தன்னை அனுப்பியது மாதவன் என சொல்லி வந்த போலி அதிகாரி பிரபாகரனை திரும்பத் திரும்ப விசாரித்ததாம். அப்போதுதான், தன்னை மாதவன் அனுப்பவில்லை நானேதான் வந்தேன் என சொன்னதாம். ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பிரபாகரனை தொடர்ந்து விசாரித்த போது, அவன் சொன்ன தகவல்களை எப்படி நம்புவது என எங்களுக்கு தெரியவில்லை.

தீபாவின் கட்சியில் தலைமை நிலைய செயலாளராக இருப்பவர் ஆயில் ராஜா. இவர் தீபாவின் நெருங்கிய நண்பரும் கூட. இவருக்கும் மாதவனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். ராஜாவை கட்சிப் பொறுப்பில் நியமித்தது பிடிக்காமல்தான் ஆரம்பத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார் மாதவன். பிறகு குடும்ப நண்பர்கள் பஞ்சாயத்து பேசி, ராஜாவை துரத்திவிட்டு கணவர் மாதவனை வீட்டுக்குள் அழைத்து வந்தனர்.

ஆனால் இது நிலைக்கவில்லை சில வாரங்களில்  மீண்டும் ராஜாவை கட்சியில் சேர்த்துக் கொண்டார் தீபா. அது மட்டுமல்லாமல் அவருக்கு தலைமை நிலைய செயலாளர் என்ற பொறுப்பும் கொடுத்தார். இது மாதவனுக்கு துளியும் பிடிக்கவில்லை. தீபாவிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும். அவர் கேட்கவில்லை. ‘என்னை கட்சியில் இருந்து நீக்க சொல்ல நீ யாரு...’ என மாதவனோடு மல்லுக்கட்ட ஆரம்பித்திருக்கிறார் ராஜா.

தீபாவும், மாதவனும் இணைந்திருப்பதில் ராஜாவுக்கு உடன்பாடு இல்லை. மாதவன் கூடவே இருந்தால், தனக்கான செல்வாக்கு தீபாவிடம் குறைந்துவிடும் என ராஜா நினைத்தார். அதனால் மாதவனை வசமாக சிக்க வைக்க வேண்டும் ப்ளான் போட்ட ஆயில் ராஜா போலி அதிகாரியான பிரபாகரனை ஏற்பாடு அனுப்பி ரைடு நடத்த சொல்லி. பிறகு காவல் துறையில் சரண்டராகி மாதவன் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பதை அவரது வாக்குமூலமாகவே கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.

அப்படி மாதவன் பெயரை போலி அதிகாரி சொன்னால், போலீஸார் மாதவனை கைது செய்துவிடுவார்கள் என கணக்குப் போட்டிருக்கிறார் ராஜா. அதற்காக ராஜா ஏவி விட்டவர்தான் இந்த டுபாக்கூர் அதிகாரி பிரபாகரன்.

இதை நாங்கள் கண்டுபிடித்தாலும், வாக்குமூலமாக அந்த டுபாக்கூரிடம் விஷயத்தை கறக்கணும், அதற்காக விசாரிக்க இன்னும் 3 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது நீதிமன்றம். அவர் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜா மீது நடவடிக்கை எடுப்போம். இது எல்லாமே தீபாவுக்கும் தெரியும்.

ஆனால், மாதவன் மீது காட்டும் கோபத்தை ஏனோ ராஜா மீது அவரால் காட்ட முடிவதே இல்லை. ஆயில் ராஜா என்ன சொன்னாலும் அதுதான் பேபிம்மாவின் வேத வாக்காம்...

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!