சுகேஷிடம் இருந்து போலி எம்பி பாஸ் பறிமுதல் - மேலும் சிக்கலில் டிடிவி...

First Published Jun 13, 2017, 3:17 PM IST
Highlights
fake MP pass seized from sukesh chandra


நாடாளுமன்ற மாநிலங்கள் அவையின் போலி அடையாள அட்டையை டி.டி.வி. தினகரனின் நண்பரும், இடைத்தரகருமான சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து டெல்லி போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது தொடர்பாக டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க.(அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் ஒரு மாதத்துக்கு மேலாக சிறையில் இருந்த டி.டி.வி.தினகரனுக்கும், மல்லிகார்ஜூனாவுக்கும் கடந்த வாரம் ஜாமீன் கிடைத்து, தற்போது வெளியே வந்துள்ளார்.

இதில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பல முறை ஜாமீனுக்கு முயற்சித்தும் அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் அவர் சிறையில் உள்ளார்.

இந்நிலையில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் அடையாள அட்டையை டெல்லி போலீசார் கைப்பற்றியுள்ளதாக ஆங்கில செய்தி சேனல்கள் தெரிவிக்கின்றன. சுகேஷிடம் கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை போலியானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுதாவது-

நாடாளுமன்ற எம்.பி.களுக்கு மட்டுமே வழங்கப்படும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த அடையாள அட்டையைப் போலவே இருக்கும்  போலி அடையாள அட்டை சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்கு கைப்பற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகம் என்பது அதிக பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நிறைந்தது. இந்த போலி அடையாள அட்டையை வைத்து சுகேஷ் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயற்சித்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அல்லது இந்த அடையாள அட்டையை வைத்து நாடாளுமன்றத்துக்கு உள்ளே அல்லது வெளியே யாரையாவது சிலரை சந்திக்க சுகேஷ் முயற்சித்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும், இந்த அடையாள அட்டையை யார் வழங்கியது, யாரிடம் இருந்து சுகேஷ் பெற்றார் என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால், இந்த அடையாள அட்டைய அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைத்துவிடாது. அப்படி இருக்கும் போது எப்படி ஒரிஜனலைப்போலவே இருக்கும் போலி அடையாள அட்டை சுகேஷிடம் கிடைத்தது. யார் இந்த போலி அடையாள அட்டையை தயார் செய்தது என்பது குறித்து போலீசார் சுகேஷிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக சுகேஷ் மீது ஐ.பி.சி. 467 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துடெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், இது தொடர்பாக அ.தி.மு.க.(அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தப்படுமா என்பது இனிமேல்தான் தெரியும் எனடெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!