மு.க.ஸ்டாலினுக்கு இன்று அறுவை சிகிச்சை!

 
Published : Jul 04, 2017, 10:47 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
மு.க.ஸ்டாலினுக்கு இன்று அறுவை சிகிச்சை!

சுருக்கம்

eye operation for stalin

திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை நடக்கிறது.

சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின், நேற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. இது பற்றி விசாரித்தபோது மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மு.க.ஸ்டாலினுக்கு கண்புரை நோய் இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற நுங்கம்பாக்கத்தல் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கண்புரை அறுவை சிகிச்சை நடக்கிறது. இது லேசர் அறுவை சிகிச்சை ஆகும்.

அறுவை சிகிச்சை முடிந்தபின் ஓரிரு நாளில் ஸ்டாலின் வீடு  திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!