75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வருமான வரியில் இருந்து விலக்கு.. மூத்த குடிமக்கள் வயிற்றில் பால்வார்த்த நிர்மலா.

By Ezhilarasan BabuFirst Published Feb 1, 2021, 1:34 PM IST
Highlights

மேலும், மாத வருவாயாக ஓய்வூதியம் மற்றும் வட்டியை மட்டுமே நம்பியுள்ள 75 வயதுக்கு மேற்பட்டோர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.  

75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் இது மூத்த குடி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது, அப்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் தாக்கல்  செய்த மூன்றாவது பட்ஜெட் இதுவாகும். இந்தியா சுதந்திரம் பெற்று முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை அவர் இன்று தாக்கல் செய்தார் அப்போது வருமான வரி குறித்து பேசும் பேது,  " இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு" என திருக்குறளை மேற்கோள் காட்டினார். அதாவது பொருள் வரும் வழிகளை உருவாக்குவது, வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறத்துடன் செலவிடுவதே திறமை மிக்க சிறந்த அரசுக்கு எடுத்துக்காட்டு. என்பதை வலியுறுத்தும் வகையில் திருக்குறலை அவர் மேற்கோள் காட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை  2014 ஆம்  ஆண்டில் 3.31  கோடியாக இருந்தது அது 2020ஆம் ஆண்டில் 6.48 கோடியாக  உயர்ந்துள்ளது.  என்றார். அதேபோல் வருமான வரி அடுக்கு விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, வழக்கம் போல 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை. கார்ப்பரேட் வரிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஓராண்டிற்கு வரிவிலக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், மாத வருவாயாக ஓய்வூதியம் மற்றும் வட்டியை மட்டுமே நம்பியுள்ள 75 வயதுக்கு மேற்பட்டோர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேபோல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்பும் போது இரட்டை வரி விதிப்புக்கு ஆளாகின்றனர் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். அதேபோல் சிறிய அளவிலான வருமானவரி பிரச்சினைகளைத் தீர்க்க புதிய அமைப்பு உருவாக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு மூத்த குடிமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  

 

click me!