முகம்மது நபி குறித்து அவதூறு பேச்சு... பாஜக நிர்வாகி கல்யாணராமன் கைது..!

By Thiraviaraj RMFirst Published Feb 1, 2021, 1:14 PM IST
Highlights

பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் கைது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறு பேசிய குற்றச் சாட்டிற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் கைது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறு பேசிய குற்றச் சாட்டிற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் முகம்மது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண ராமல் உள்ளிட்ட 2 பேரை கைது செய்த போலீசார் விநாசி கிளை சிறையில் அடைத்தனர்.  கல்யாண ராமன் மீது 147, 148, 504, 506(2), 153(பி) 269 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கல்யாண ராமன் கைதுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். '’ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க விதத்தில் விமர்சித்த இந்துவிரோதி வைரமுத்துவை கைது செய்யாத காவல்துறை கல்யாணராமனை கைது செய்துள்ளது பாரபட்சமானது. கண்டிக்கத் தக்கது’’ ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், ‘’கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி அவர்களை‌ இழிவுபடுத்தி அவதூறு செய்து SDPI, மற்றும்‌ PFI இசுலாமிய பயங்கரவாத அமைப்புக்கள் சுவரொட்டிகள்‌ மற்றும்  பேசியதை கண்டித்து  நடந்த கூட்டத்தில்  திரு கல்யாணராமன் அவர்கள் பேசினார். கல்யாணராமன் பேச ஆரம்பித்த பொழுது அதில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கண்ட இசுலாமிய‌ பயங்கரவாத அமைப்புக்களின் குண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து பிரச்சனை செய்துள்ளனர்

.

ஆனால் காவல்துறை அந்த பயங்கரவாதிகளை அகற்றவோ அல்லது அவர்களை கைது செய்யவோ துளி கூட யோசிக்கவில்லை, மாறாக அவர்களிடத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தது. இந்நிலையில் கூட்டம் முடிந்து ஒரு இல்லத்தில் உணவருந்தி கொண்டிருந்த கல்யாணராமனை கைது செய்து இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புக்களை திருப்தி செய்வதை மீண்டும் நிரூபித்துள்ளது கோவை மாவட்ட காவல்துறை’’எனத் தெரிவித்துள்ளார்.

click me!