வள்ளுவரையும், குறளையும் மறக்காத நிர்மலா சீதாராமன்.. பட்ஜெட் உரையில், திருக்குறளை மேற்கோள்காட்டி அசத்தல்.

By Ezhilarasan BabuFirst Published Feb 1, 2021, 12:43 PM IST
Highlights

பட்ஜெட்டின் போது திருக்குறளை நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டி பேசியுள்ளது அவையில் வரவேற்பை பெற்றது 

பட்ஜெட்டின் போது திருக்குறளை நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டி பேசியுள்ளது அவையில் வரவேற்பை பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் முதல்முறையாக காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.  அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும். 

கொரோனா நெருக்கடியில் நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் அதை சரி செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நிவாரண சலுகைகளும் வழங்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் அவர் இந்த பட்ஜெட்டை வாசித்து வருகிறார். 

பட்ஜெட் தாக்கலின்போது இடையில் அவர் திருக்குறளை மேற்கோள் காட்டிபேசினார்,  " இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு" என்றார், அதாவது பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு. என்பதை வலியுறுத்தும் வகையில் திருக்குறலை அவர் மேற்கோள் காட்டினார்.  

அவரின் இந்த பேச்சை அவையில் இருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர். குறலையும், வள்ளூவரையும்,  நினைவு கூர்ந்தது தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மத்திய அரசு தமிழ்மொழியையும் திருவள்ளுவரையும் அரசு விழாக்களில் பெருமைப்படுத்தி வரும் நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள் காட்டியது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 

click me!